உள்ளடக்கத்துக்குச் செல்

காம சாத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடமொழி இலக்கியங்களில், காம சாத்திரம் என்பது காமத்தைக் குறித்த நூல்களை பொதுவாக குறிக்கின்றது. எவ்வாறாக அர்த்தசாத்திரம் அர்த்தத்தை (பொருள்) குறித்துக் கூறுகிறதோ, அவ்வாறாகவே காம சாத்திரத்தையும் எடுத்துக்கொள்ளலாம். காம சாத்திரம் ஒரு நாகரீக மனிதன் காமத்தை எவ்வாறு நுகருதல் வேண்டும் என்பதை விளக்குகின்றது. காம சூத்திரம் என்பது காம சாத்திரத்தை விளக்கும் மிகவும் பிரபலமான நூல் ஆகும்.[1]

தோற்றம்

[தொகு]

காம சாத்திரத்தின் தோற்றம், நந்தி தேவரால் நிகழ்ந்தது என நம்பப்படுகிறது. கைலாயத்தில் சிவன், பார்வதி இடையில் காமத்தைக் குறித்த உரையாடல்களைத் தற்செயலாகக் கேட்டதை அடிப்படையாகக் கொண்டு 1000 அத்தியாயங்களில் மிகவும் விரிவான நூலாக நந்தி தேவர் எழுதினார் எனக் கூறப்படுகிறது. கி.மு எட்டாம் நூற்றாண்டில் ஷ்வேதகேது என்பவர் நந்தியின் நூலைச் சுருக்கி 500 அத்தியாயங்களில் எழுதினார். இருப்பினும் அந்நூல் மிகவும் விரிவாக இருந்ததால், பாப்ரவியர் என்பவரும் அவரது சீடர்களும், ஷ்வேதகேதுவின் நூலுக்கு இன்னொரு சுருக்கத்தை இயற்றினர். கி.மு மூன்றாம் மற்றும் முதலாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பலர் பாபிரவியரின் நூல்களை ஆராய்ந்து பலரும் பல்வேறு நூல்களை அதன் அடிப்படையில் எழுதினர்.

தற்சமயம், காம சாத்திரத்தைக் குறித்த பழமையான நூலாக கிடைத்திருப்பது வாத்சாயனர் இயற்றிய காம சூத்திரம் மட்டுமே. காம சூத்திரத்தில் மேற்கோளாகக் குறிப்பிடப்படும் மேற்கூறப்பட்ட அனைத்து நூல்களும் தற்காலத்தில் மறைந்து விட்டன.

வாத்சாயனரைப் பின்பற்றி, பலரும் காம சாஸ்திரத்தைக் குறித்த நூல்களை இயற்றியுள்ளனர். அவற்றுள் சில மட்டுமே காம சாஸ்திரத்தை குறித்து தன்னிச்சையாக எழுதப்பட்டன, மற்றவை அனைத்தும் காம சூத்திரத்தைக் குறித்த உரைகளே ஆகும். பிற்காலத்தில் இயற்றப்பட்ட காம சாஸ்திர நூல்களில் புகழ் பெற்றது கோககரின் ரதி ரகசியம் மற்றும் கல்யாணமல்லரின் அனங்கரங்கம் ஆகியவை ஆகும். காம சூத்திர உரை நூல்களில் புகழ் பெற்றது, ஜெயமங்களரால் இயற்றப்பட்ட உரை நூல் ஆகும்.

சொற்பொருளாக்கம்

[தொகு]

காமம் என்ற வடமொழிச்சொல்லுக்கு ஆசை, விருப்பம், இன்பம் என பல பொருள்கள் உள்ளன. அவற்றுள் பாலியல் தொடர்பான இன்பம் என்பது அச்சொல்லின் பல்வேறு பொருள்களில் ஒன்று.

காமத்தை குறித்த சாஸ்திரம் ஆகையால், இது காமசாஸ்திரம் என அழைக்கப்படுகிறது.

காம சாத்திரத்தை குறித்த நூல்கள்

[தொகு]

மறைந்த நூல்கள்

[தொகு]
 • நந்தி தேவர் இயற்றிய மூல காம சாஸ்திரம் (1000 அத்தியாயங்கள்)
 • ஷ்வேதகேது இயற்றிய காம சாஸ்திரம் (500 அத்தியாயங்கள்)
 • பாப்ரவியாகாரிகர் இயற்றிய காம சாஸ்திரம்
 • சாராயனவயார் இயற்றிய காம சாஸ்திரம்
 • கோதகமுகர் இயற்றிய காம சாஸ்திரம்
 • கோனர்தியர் இயற்றிய காம சாஸ்திரம்
 • கோனிகபுத்திரம் இயற்றிய காம சாஸ்திரம்
 • தத்தகர் இயற்றிய காம சாஸ்திரம்
 • சுவர்னாபர் இயற்றிய காம சாஸ்திரம்

பிற்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள்

[தொகு]
 • காம சூத்திரம்
 • கல்யானமல்லரின் அனங்கரங்கம்
 • மைசூர் அரசர் மாதவர் இயற்றிய தத்தக சூத்திரம்
 • கல்லரசரி இயற்றிய ஜனவசியம்
 • ஜயமங்கலரின் காமசூத்திர உரை
 • அனந்தம் இயற்றிய காமசமூகம்
 • கந்தர்ப சூடாமனி
 • குசுமாரரின் குசுமார தந்திரம்
 • தாமோதர குப்தர் இயற்றிய குத்தினமதம்
 • சாளுக்ய அரசர் சோமதேவர் இயற்றிய அபிலாஷிதார்த சிந்தாமணி
 • பௌத்த துறவி பத்மஸ்ரீ எழுதிய நாகரசவஸ்வம்
 • காவியசேகரர் எழுதிய பஞ்சஷாயகம்
 • தீக்ஷித சாமரஜன் இயற்றிய ரதிகல்லோலினி
 • கோககரரின் ரதிரகசியம்
 • ஜயதேவர் எழுதிய ரதி மஞ்சரி
 • விஜயநகர அரசரி பிரௌத தேவராஜர் இயற்றிய ரதிரத்தினபிராதிப்கம்
 • குமார ஹரிஹரரின் சிருங்கார ரச பிரபந்தாதிபிகம்
 • மின்னனாதர் இயற்றிய 'ஸ்மரதீபிகம்
 • ஷேமேந்திரரின் சமயமாத்ருகம் '
 • குணகரரி இயற்றிய 'ஸ்மரபிராதமிகம்
 • காம சூத்திர உரையான வாத்சாயன சூத்திரசாரம்

காம சாத்திரமும் காவியங்களும்

[தொகு]

அனைத்து வடமொழி இலக்கியங்களிலும் காவியங்களிலும் காதல் தொடர்பான அனைத்துக் கருத்துகளும் காம சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே எழுதுதல் வேண்டும். எனவே வடமொழிப் புலவர்களால் காம சாத்திரம் கற்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
 1. Erotic Arts of India

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காம_சாத்திரம்&oldid=3080839" இலிருந்து மீள்விக்கப்பட்டது