பேச்சு:காசுப்பாய்ச்சல் கூற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலாநிதி, காசுபாய்ச்சல் என்னும் சொல்லாட்சி சரியாக இருப்பதாகத் தெரியவில்லை. பாய்ச்சல் என்னும் சொலின் அடியாக பாய் = flow என்று இருந்தாலும், பாய்ச்சல் என்னும் சொல்லாட்சி இங்கு பொருந்தவில்லை. நாய் குதிரை முதலியன நாலு கால் பாய்ச்சலில் ஓடுவதாகக் கூறுவதுண்டு. நீர்பாய்ச்சல் என்னும் பொழுது நீர் பாய்வது பெறப்படுகின்றது. ஆயினும் காசு பணத்திற்கு பொருந்துவதாக இல்லை. பணம் காசுப் பாய்வு என வேண்டுமானால் கூறலாம் (முழு நிறைவு தரவில்லை). பணம் காசு நகர்ச்சி, பணம் காசுப் போக்குவரத்து என ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான சொல் காசு, பணச் செலவு, ஆனால் இன்றுள்ள குறுகிவிட்ட பொருள் வெளியில், செலவு <- செல், செல்லுவது என்னும் பொருள் அருகிவிட்டது. இலங்கைச் செலவு என்றால் இலங்கைக்குப் பயணம் போவதைக் குறிக்கும். சென்றான், செல்லுதல் என்னும் சொல்லில் உள்ள செல்லுவது செலவு. ஆனால் இன்று, அதுவும் குறிப்பாக பணம் காசு என்று வரும் பொழுது, செலவு என்றால் கையைவிட்டுப் போகும் பணத்தை மட்டுமே குறிக்குமாறு பொருள் குறுகிவிட்டது. செலவு = transport, travelling, transit ஆகிய பொருட்களை சிறப்பாகவும் பொருத்தமாகவும் சுட்டும். எனவே பணம்/காசு நகர்ச்சிக் கூற்று என்று சொன்னால் பொருந்துமா?--செல்வா 21:00, 14 பெப்ரவரி 2007 (UTC)


செல்வா மேற்படி சொல்லாட்சியும் இலங்கை உயர்தர கணக்கியல் தமிழ்மொழிமூல கற்கைநெறியில் அங்கீகரிக்கப்பட்ட சொல்லாகும்.நீங்கள் கூறும் கருத்து ஏற்ககூடியதாக இருப்பினும் இலங்கையில் பல்கழைக்கழக மட்டம்வரை பிரயோகிக்கப்படுமிச்சொல்லை இக்காரணத்தால முழுமையாக நிராகரிக்க மனம் ஒப்பவில்லை.எனவே என் கருத்து அப்படியே இருக்கவேண்டும் என்பதாகும்.--கலாநிதி 17:01, 16 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி கலாநிதி. அருள்கூர்ந்து நான் இங்கு எழுதியதைப் படியெடுத்து இலங்கைப் பாடநூல் வெளியீட்டாருக்கு அனுப்புங்கள். மேற்குலக நாடுகளில், பொருத்தமாக ஏதும் சொன்னால் முறைப்படி மறுநோக்கிட்டு திருத்திக் கொள்வர். இது நான் பல முறை இங்கு கண்டது. வளர்ச்சிக்கு அடிக்கல்லாய் நிற்பது -எது சரி என்று அறியப்படுகின்றதோ அத்னை ஏற்று நடைமுறைப் படுத்துதல் என்பது ஒன்றாகும். அவர்கள் முகவரி தந்தீர்கள் என்றால் நானும் மடல் எழுத முயல்வேன். நீங்கள் எழுதினால் சிறப்பாக இருக்கும்.--செல்வா 17:08, 16 பெப்ரவரி 2007 (UTC) பணவோட்டம், பணப்புழக்கம் என்பன என்ன என்ன பொருளில் இலங்கையில் ஆளப்படுகின்றன?--செல்வா 17:13, 16 பெப்ரவரி 2007 (UTC)

பணப்புழக்கக் கூற்று என்பது மிகவும் பொருத்தமாகவும் எளிமையாகப் புரிந்து கொள்ளத்தக்கதாகவும் இருக்கும். காசுப்பாய்ச்சல் என்பது செயற்கையாக இருக்கிறது. பாய்ச்சல் என்ற சொல்லை இந்தப் பொருளில் பயன்படுத்துவதில்லை--Ravidreams 09:26, 17 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, தாய்மொழிக் கல்வி அறிமுகமான ஒருகாலத்தில் இலங்கையில் பாடநூல்களுக்காக பல தமிழறிஞர் முயற்சியால் கலைச்சொல்லாக்கம் சிறப்பாக நடந்தது. பாடநூல்களும் தரமாக வந்தன. இப்போது தமிழைக் கவனிப்பாரில்லை. பாடநூல்களிலேயே எழுத்துப்பிழைகள், கருத்துப்பிழைகள் நிறைய... எடுத்துச் சொல்வது என்பதெல்லாம் நடக்கக் கூடியதல்ல. எமது மொழி புறக்கணிக்கப்படும் சூழலில் வாழ்கிறோம். எமது வழக்குகள் தொடர்பில் நாம் உணர்வுபூர்வமாக அணுகுவதன் காரணமும் இதுவாகவே இருக்கும் என நினைக்கிறேன். அவர்களுக்கு கடிதம் எழுதி, அவர்கள் திருத்தி என்பதெல்லாம் நடக்கக் கூடியதாகத் தெரியவில்லை.... கோபி 17:31, 16 பெப்ரவரி 2007 (UTC)

மேற்படி விடயம் குறித்து பழைய கொப்பிகளை புரட்டி பார்த்தே எதேனும் தகவல் தரலாம்.மேலும் இலங்கையில் வரையறுக்கப்பட்ட நிருவனங்கள் நிதியாண்டு முடிவில் அவர்களது நிதிக்கூற்றுக்கள் பத்திரிகையில் வெளியிடப்படல் சட்ட கட்டாயமாகும்(ஏன் உலகளவினில் கூட) அப்போது அவர்களால் தமிழ் பத்திரிகைக்ககு வெளியிடப்படும் அவ்நிதி அறிக்கையில் ஒன்றாக காசுப்பாய்ச்சல் கூற்று எனும் பெயரில் வெளியிடப்படுவதை பலமுறை நான் பத்திரிகையில் பார்த்திருக்கின்றேன்.இதனை மாற்ற வேண்டும்மெனின் கடினமே!பொதுவாக இலங்கையில் பாடங்கள் சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்டே பின் தமிழ் ஆங்கில மொழி மாற்றம் செய்யப்படுவது குறிப்பிடதக்கவிடயமாகும்.--கலாநிதி 17:36, 16 பெப்ரவரி 2007 (UTC)

கோபியின் தோன்றிய அதே உணர்வே எனக்கும் மேலும் இலன்க்கையில் தமிழ்மூலம் படிப்பவருக்கு பாடபுத்தகம் கைக்கு கிடைப்பதே பெரும்பாடு இந்த நிலலையில்!? மேலும் கடைசியாக 2000ம் ஆண்டு என நினைக்கின்றேன் வெளியிடப்பட்ட புதிய பாடதிட்ட சாதாரண தரம் வரையான வரலாறுகல்வி புத்தகத்தில் அளவுகடந்த சிங்கள சொற்கள் விரவி காணப்பட்டது எனவே எங்களால் கூறக்கூடியது பிச்சை வேண்டாம் நாயைப்பிடி மாத்திரமே.பொருத்தமில்லாதுவிடினும் தமிழிலே இருந்துவிட்டு போகட்டும்.மேலும் தமிழ்நாட்டில் எந்தவகையான நிலமை கா?ணப்படுகிறதோ? --கலாநிதி 17:48, 16 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி கோபி, கலாநிதி நானும் சில இப்போது தொடர்புகள் அவ்வளவாக இல்லாவிட்டாலும் முன்னொருசமயம் இலங்கைப் பாடத்திடத்தில் கண்ணிவெடி அபாயம் தொடர்பான கற்கைகளில் நான் ஒன்றுகூடல்களை ஒழுங்கைமைபதில் பணியாற்றியாற்றிருந்தே எனது பெயர் புத்தகத்தில் இல்லாவிட்டாலும் கூட அதிலுள்ள பல தகவல்கள் நான் கடமையாற்றிய கணினியில் IMSMA Database இல் இருந்து பெறப்படனவே. இலங்கையில் தமிழாக்கப் பணிகள் கவலைகொள்ளவே வைக்கின்றன பேசாமல் ஆங்கிலத்திலேயே இருந்திருந்தால் நன்றாகவிருக்கும் என்றே எண்ணுகின்றேன். --Umapathy 06:09, 17 பெப்ரவரி 2007 (UTC)

கலாநிதி, கோபி, உமாபதி, நீங்கள் கூறுவதைக் கேட்டு மனம் மிகவும் நோகின்றது. உலகளாவிய தமிழர் குமுகம் இன்னும் தம் நேர்மையான உரிமைகளை உணரவில்லை, ஆக்கந்தரும் கூட்டுழைப்பு, ஒத்துழைப்பும் உணரவில்லை. --செல்வா 13:51, 17 பெப்ரவரி 2007 (UTC)
நன்றி செல்வா, நேரடியாக முயற்ச்சிசெய்கின்றேன் சரிவராவிட்டால் யுனிசெவ் ஊடாகவோ அல்லது ஊடகங்களூடாகவே முயற்ச்சிக்கலாம். இலங்கைப் புத்தங்கள் உருவாக்குவதல் மற்றும் ஆய்வுகளில் ஈடுபடுபவர்கள் National Institute of Education இவர்களே பெரும்பாலும் கருத்தரங்குகளில் பங்குபற்றுபவர்களும் பங்களிப்பவர்களும் ஆவார். இலங்கையில் பாடப் புத்தங்களை வெளியிடுபவர்கள் Education Publication Department,--Umapathy 14:42, 17 பெப்ரவரி 2007 (UTC)

DEBENTURE என்கிற சொல்லுக்கு "பகுதிகடன்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது சரியான மொழிபெயர்ப்பல்ல என தோன்றுகிறது. பகுதிகடன் "partial loan" என அர்த்த தருகிறது. DEBENTUREஐ "கடனியம்" என மொழிபெயர்ப்பது சிறந்தது என் தோன்றுகிறது. "BOND"ஐ "கடனீடு"ஆக மொழி பெயர்க்கலாம். கடனீடு = கடன் + ஈடு -> secure+loan. BOND கடன் பத்திரங்களுக்கு நிலம் வழக்கமான ஈட்டுறுதியாக அமைகின்றன. DEBENTURE கடன்பத்திரங்களுக்கு இத்தகைய ஈட்டுறுதி அமைவதில்லை. - ராஜ் (தொழிநுட்பம் இணையம்)