பேச்சு:கன்னித் தீவு (தொடர் படக்கதை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டு ஐயங்கள்:

  1. இத்தொடர், இப்போது நிறைவு பெற்றுவிட்டதா?
  2. இது கேலிச் சித்திரக் கதையா? அல்லது படத் தொடர்கதையா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:00, 15 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

இது கேலிச் சித்திரக் கதை அல்ல படத் தொடர்கதை, இது முடிந்து விட்டதா என்று தெரியவில்லை. கன்னித்தீவு முடிந்து விட்டதா? நான் செய்தித்தாள் வாசித்துப் பழகியதே கன்னித்தீவினால் தான் இதை படிப்பதற்காகவே டீ கடைக்கு சென்று தினத்தந்தி படிப்பேன் கன்னித்தீவிற்கு பின் ஆண்டியாரையும் படிக்க ஆரம்பித்தேன்--68.100.81.64 10:36, 15 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

கன்னித் தீவு (தொடர் படக்கதை) என்ற தலைப்புக்கு மாற்றுகிறேன். நன்றி--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:51, 17 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
நன்றி; ஆனால், கன்னித் தீவு (கேலிச் சித்திரக் கதை) எனும் தலைப்பினையும் நீங்கள் தக்கவைத்திருப்பதால்... இன்னமும் எனக்கு ஐயம் தீரவில்லை. வெறும் 3 படங்களை மட்டும் தினந்தோறும் வெளியிட்டு பல ஆண்டுகளுக்கு பிரசுரித்ததால் மட்டுமே அத்தொடர்கதை கேலிக்குரியதாகியது (கிண்டலுக்குரியதாகியது) என்பது எனது கருத்து. மற்றபடி, இக்கதையானது கேலிச் சித்திரக் கதை எனும் பிரிவின்கீழ் வருமா? தெளிவுபெற எண்ணியே கேட்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:26, 17 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]