பேச்சு:ஓரோலோச்சியம்
Appearance
தமிழில் ஓரை என்பது நெடுங்காலமாக கிரேக்க ὥρα = "time, hour" என்பதற்கு ஈடாகக் கருதப்படும் ஒன்று. ஓரையில் இருந்து ὥρα (ஓரா, ஃகோரா) வந்ததா அல்லது எதிர்த்திசையில் சென்றதா என்பது வேறு கேள்வி. ஓராலோகியம், ஓராலோச்சியம் என்பது போல இந்த விண்மீன் கூட்டத்துக்குத் தமிழில் வழங்கலாம் என்பது என் கருத்து. இத்தாலிய மொழியில் இதனையே Orologio (costellazione) (பார்க்கவும்) என்கின்றனர். எனவே எளிமையாக ஓரோலோச்சியம் அல்லது ஓரோலோகியம் எனலாம். --செல்வா (பேச்சு) 05:48, 10 நவம்பர் 2012 (UTC)