ஓரோலோச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Horologium
{{{name-ta}}}
விண்மீன் கூட்டம்
Horologium
{{{name-ta}}} இல் உள்ள விண்மீன்கள்
சுருக்கம்ஹோர்
Genitiveஹோரோலோஜி
ஒலிப்பு/ˌhɒrɵˈlɒiəm/,
genitive /ˌhɒrɵˈlɒi/
அடையாளக் குறியீடுஊசல் கடிகாரம்
வல எழுச்சி கோணம்3 h
நடுவரை விலக்கம்−60°
கால்வட்டம்SQ1
பரப்பளவு249 sq. deg. (58 வது)
முக்கிய விண்மீன்கள்6
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
10
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள்2
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்0
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்1
ஒளிமிகுந்த விண்மீன்α Hor (3.85m)
மிக அருகிலுள்ள விண்மீண்GJ 1061
(11.99 ly, 3.66 pc)
Messier objectsnone
எரிகல் பொழிவு?????
?????
அருகிலுள்ள
விண்மீன் கூட்டங்கள்
எரிடானஸ்
ஹைட்ரஸ்
ரெடிகுலம்
டோராடோ
சீலம்
Visible at latitudes between +30° and −90°.
டிசம்பர் மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.

ஓரோலோச்சியம் (Horologium, ஹோரோலோஜியம்) என்பது தென் பகுதியில் காணப்படும் ஒரு சிறிய, மங்கலான விண்மீன் கூட்டமாகும். இலத்தீன் மொழியில் இதற்குக் கடிகார ஊசல் என்று பொருள்.[1]

18 ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டின் வானவியலாளரான 'அபே நிக்கோலஸ் லூயிஸ் டி லாகாலே' [2] என்பவர், ஊசல் கடிகாரத்தைக் கண்டுபிடித்த கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் என்பவரைப் பெருமைப்படுத்தும் முகமாக இதற்கு ஹோரோலோஜியம் ஆசிலிடோரியம் என்று பெயரிட்டார். இது காலப் போக்கில் சுருக்கி ஹோரோலோஜியம் ஆனது.

இது எரிடானஸ் வட்டாரத்திலுள்ள பிரகாசமான் ஆர்செர்னர் விண்மீனுக்கும், கரினா வட்டாரத்திலுள்ள பிரகாசமான கனோபஸ் விண்மீனுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது ஒரு ஊசலாடும் குண்டுபோலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் பிரகாசமிக்க ஆல்பா கோரோலோஜி, ஊசலின் அலைவு தானத்தில் உள்ள நிறைமிக்க குண்டு போல அமைந்துள்ளது. மொத்தம் 20 விண்மீன்கள் இவ்வட்டாரத்தில் அமைந்திருக்கலாம் என கண்டறிந்துள்ளனர். இதிலுள்ள R ஹோரோலோஜி சீடெஸ் வட்டாரத்திலுள்ள மீரா விண்மீன் போல ஒரு பெருஞ் சிவப்பு மாறொளிர் விண்மீனாக உள்ளது. இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் பெரும நிலையில் 5 லிருந்து, சிறும நிலையில் 14 வரை, சுமார் 13 மாத கால நெடுக்கையில் மாற்றத்திற்கு உள்ளாகிறது.[2]

ஒளிப்பொலிவெண்ணில் மிக அதிக வேறுபாட்டுடன் கூடிய மாறொளிர் விண்மீன் இதுவே ஆகும். இப்பகுதியில் AM 1 என்று குறிப்பிடப்படும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் உள்ளது.[2] இக் கூட்டமே, பால் வெளி அண்டத்திலிருந்து வெகு தொலைவு தள்ளி இருக்கும் கூட்டமாகும். இது 3,98,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக அறிந்துள்ளனர்.

மேற்கோள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரோலோச்சியம்&oldid=2696409" இருந்து மீள்விக்கப்பட்டது