பேச்சு:ஏரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg ஏரணம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
 • ஏரணம் என்ற சொல்லுக்கு தமிழ் இலக்கியத்தில் இருந்து சில எடுத்துகாட்டுகள் தர முடியுமா? நன்றி.
 • தருக்கம், தர்க்கம், தர்க்கமுறை, தருக்கவித்தை, தருக்கரீதியில், தார்க்கிகன் என்றே பல அகராதிகளில் உண்டு.

--Natkeeran 03:31, 11 டிசம்பர் 2008 (UTC)

நற்கீரன், நாம் முன்னரே தருக்கம், ஏரணம் ஆகியவற்ரின் வேறுபாடுகள் பற்றி உரையாடியுள்ளோம். பார்க்கவும்: பேச்சு:நியாயம் (இந்து தத்துவம்). தருக்கம் என்பது argumentative art என்னும் பொதுச்சொல்.அதில் பல உத்திகள், முறைகள் கையாளப்படலாம். ஏரணம் என்பது அவற்றுள் ஒன்று. எனவே ஏரணம் வேறு தருக்கம் வேறு. தேவநேயப் பாவாணரின் திருக்குறள் தமிழ்மரபுரை என்னும் நூலில் பக்கம் 821 ஐப் பார்த்தால் அதில் அவர் பழந்தனிச் செய்யுள் ஒன்றினைக் கொடுத்துள்ளார். அது:

ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதஞ்சாலம்
தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருள் என்றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள

பல்வகை நூல்கள் இருந்து அழிந்தது பற்றிய பாடல் இது. செ.ப. அகராதி, "ஏரணங் காணென்ப ரெண்ணர் (திருக்கோ. நூற்சிறப்.)." என்னும் மேற்கோளைக் காட்டுகின்றது. இதில் வரும் எண்ணர் என்னும் சொல்லும் Mathematician or logician பொருள் கொண்டது. பார்க்கவும்--செல்வா 05:15, 11 டிசம்பர் 2008 (UTC)

ஏரணம் சரியான பதமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் ஈழத்தில் படநூல்களில் பயன்படுத்தப்படுவது கருதி அளவையியல் க்குப் பக்கவழிப்படுத்தியுள்ளேன்.--சஞ்சீவி சிவகுமார் 09:29, 12 அக்டோபர் 2011 (UTC)

குறிப்புகள்[தொகு]

 • வாதம் - Argument
 • மூலக்கூற்று - Premise
 • முடிவு - Conlusion
 • Informal logic
 • Mathematical logic, formal logic
 • Predicate logic
 • Propositional calculus
 • Logical connective
 • Truth table
 • Deductive reasoning
 • Inductive reasoning

--Natkeeran 04:02, 11 டிசம்பர் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏரணம்&oldid=2306697" இருந்து மீள்விக்கப்பட்டது