பேச்சு:நியாயம் (இந்து தத்துவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தருக்கவியல் = logic ??--Natkeeran 20:41, 20 ஜூலை 2006 (UTC)

ஏரணம் = logic. (சீராய், படிப்படியாய், அறிவடுக்க முறையில் நிறுவும் துறை). மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், ப்யன்படுத்திய சொல். தமிழ் லெக்சிகனைப் பார்க்கவும்:

ஏரணம் (p. 0564) [ ēraṇam ] n ēraṇam . Logic; தருக்கநூல். ஏரணங் காணென்ப ரெண்ணர் (திருக்கோ. நூற்சிறப்.). --C.R.Selvakumar 22:55, 20 ஜூலை 2006 (UTC)செல்வா

ஏரணத்தை விட தருக்கமே வழமை என்று நினைக்கின்றேன். தருக்கம் வடமொழி என்று நினைக்கின்றேன், ஆனால் நல்ல சொல் போன்றே தெரிகின்றது. --Natkeeran 23:46, 20 ஜூலை 2006 (UTC)

தமிழில் ஏரணம் வடமொழியில் தர்க்கம் என்பது வேறுபாடானது. தமிழில் ஏரணம் என்பது படிப்படியாய் ஏலும் (இயலும், பொருந்தும்) கருத்துக்களின் அடிப்படையில் மேலே சென்று உயர் முடிபு அடைதல். கழக தமிழகராதி இருந்தால் நான் கூறும் சொற்களை பாருங்கள். தமிழில் ஏராதது = ஏலாதது. ல்-ர் தமிழில் தொடர்புடையது, போலி என்றும் சொல்வதுண்டு.
ஏல = இயல, பொருந்த.
ஏலல் = ஒப்புக்கொள்ளல்.
ஏலாதது = இயலாதது, பொருந்தாதது.
ஏலாதன= தகாதன.
ஏல் = பொருத்தம்,
ஏல் > ஏற்றல் (கல் > கற்றல்; தோல் > தோற்றல்; வில் > விற்றல்; நூல் > நூற்றல்)
ஏல் > ஏற்றுதல் (கொடியேற்றுதல், நாணேற்றுதல்) = உயர்த்துதல்.
ஏறெடுத்தல் = மேலெடுத்தல் (ஏறெடுத்துப்ப்பார்த்தல் = நிமிர்ந்து பார்த்தல்)
ஏர் = எழுச்சி (ஏர் என்னும் கலப்பை கீழிருக்கும் மண்ணை மேல் கொணர்வது), பொருந்திய
ஏர்பு = எழுச்சி. (ஏர்பு என்பது கோள்கள் எழுந்து செல்லும் சுற்றுப்பாதையைக் குறிக்கும் ஒரு அருமையான கலைச்சொல். orbit.)
ஏர்தல் =எழுதல், ஒத்தல். சுமார் 60-70 சொற்களை நெருக்கமாக ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஏரணம் என்பது ஏலும்படியாக அடுக்கும் அறிவுத்தொடை (தொடுக்கப்படுவது தொடை). அறிவொப்புடையதாய் இருத்தலும், படிப்படியாய் ஏறுவதும், உயர்வதும், உயர்ந்து முடிவை எட்டுவதும் ஏரண முறை. Logical conclusion, logically based ultimate proof என்பது தமிழில் ஏறுகடை (கழக அகராதி பார்க்கவும்). ஏர்-ஏல்-ஏற்.
தருக்கம் (தர்க்கம்) என்பது argument. இது ஏரண முறை என்று சொல்வதற்கில்லை. தர்க்கத்திற்கு ஏரணமும் பயன்படலாம், ஆனால் ஏரணம் வேறு. Logical devices என்பதற்கு எரணக்கருவிகள் எனலாம். ஆனால் தர்க்கக் கருவிகள் என கூறவியலுமா என்று எண்ணிப்பாருங்கள் (பொருள் முற்றிலும் வேறுபடும்). --C.R.Selvakumar 02:21, 21 ஜூலை 2006 (UTC)செல்வா


விளக்கத்துக்கு நன்றி. தருக்க படலை (logical gate) என்றே சொல்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏலும், ஏலாது, ஏற்றம் போன்ற சொற்கள் பேச்சில் பயன்படுத்துவதுதான். logically என்பதற்கு தர்க்கரீதியாக என்றுதானே குறிப்பிடுகின்றார்கள். மேலும் அலசி பார்க்கின்றேன். --Natkeeran 02:48, 21 ஜூலை 2006 (UTC)