பேச்சு:எழில் (நிரலாக்க மொழி)
Appearance
நல்ல முயற்சி போன்று உள்ளது. ஆனால் பெருந் தொகை எழுத்துப் பிழைகள் உள்ளன. "எழில் ஒரு தமிழ் நிரல் மொழி. தமிழ் மொழியில் கணிப்பொரியை செயலாற்றூவது இதன் குரிக்கோள். ஆங்கில வார்தைகளையும் உட்கொள்ளும். தமிழ் மாணவர்களுக்கு இது முதன் முரை கணிப்பொரி நிரல் ஏழுதுவதர்கு உதவும். இது ஒரு சுதந்திர மென் பொருள் மற்றும் GNU GPL அனுமதியை கொண்டது. " இவ்வளவு பிழைகள் இருப்பதால் இது ஒர் அங்கத/விசம முயற்சியாக இருக்கலாமோ என்று கூடத் தோன்றுகிறது. --Natkeeran (பேச்சு) 13:56, 3 சூலை 2013 (UTC)
- இதன் தளத்தில் தவறாக எழுதப்பட்டிருக்கிறது உண்மைதான். மொழிபெயர்ப்பும் தவறாக உள்ளது. எனினும், தமிழுக்கு நல்ல கட்டுரை! பிழைகளை திருத்திடுவோமே :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:03, 3 சூலை 2013 (UTC)
இது போலி கட்டுரை அல்ல. எழில் இலவசமாக கிடைக்கும் மென்பொருள் தான். தற்போது நீங்கள் பதிவிறக்கி அதை பயன்படுத்த முடியும். @தமிழ்க்குரிசில், @Natkeeran உங்கள் கருத்துகளுக்கு நன்றி. --Photonique (பேச்சு) 21:37, 3 சூலை 2013 (UTC)
- இப்போது, இதற்கான கிட்ஹப் தளத்தில், தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள இந்த கட்டுரைக்கு இணைப்பு வழங்கியிருக்கிறார்கள்! (புரியாதவர்க்கு: உருவாக்கியவரின் மென்பொருளுக்கு நாம் இங்கே கட்டுரை எழுத, உருவாக்கியவர் இங்குள்ள கட்டுரையை அங்கு இணைப்பாகத் தந்துள்ளார். :D ) இதன்மூலம் விக்கிப்பீடியாவின் பயனை உணரலாம். நம்மை நாமே உற்சாகமூட்டிக் கொள்ளலாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:10, 11 செப்டம்பர் 2013 (UTC)