பேச்சு:இழைமணியப் பழையோள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழைய தலைப்பான இழைமணிவழிப் பொதுத்தாய் பற்றிய உரையாடல்[தொகு]

இக்கட்டுரைக்கு இதைக் காட்டிலும் பொருத்தமான சரியான தலைப்பு இருந்தால் பரிந்துரையுங்கள். இக்கட்டுரையைச் சிறிது சிறிதாக வளர்த்தெடுக்க எண்ணியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 09:33, 8 ஜூன் 2009 (UTC)

இழைமணிய முதல்தாய் எனலாம். அல்லது இழைமணிய முதற்றாய் எனலாம். தமிழில் பழையோள் என்னும் ஒரு கருதுகோள் உண்டு. எல்லோரும் அவள்வழி வந்தவள் என்பது கருத்து. சிவன் முதலான கடவுளரும் பழையோள் வழி வந்தவர்கள் என்பது மெய்யியல், தொன்மதக் கொள்கை. எங்கு முதலில் கூறப்பட்டுள்ளது என்பதும், என்ன தெளிவாகக் கூறியுள்ளனர் என்றும் பார்க்க வேண்டும். --செல்வா 21:34, 10 ஜூன் 2009 (UTC)
நல்ல பரிந்துரைகள், செல்வா. கட்டுரைகளை விரிவுபடுத்தியதற்கும் நன்றி. பழையோள் என்ற சொல்லின் சரியான பொருள் அறிந்து, பொருத்தமெனில் ஒரு மாற்றுப் பயன்பாடாகவாவது தர வேண்டும். தமிழ் லெக்சிக்கனில் திருமுருகாற்றுப்படையில் இச்சொல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருளை விளக்க முடியுமா? ஆங்கிலத்தில் ஏவாள் என்று அழைத்ததால் இவர் மாந்தரினத்தின் முதல் பெண் என்ற முற்றிலும் தவறான எண்ணம் பரவியுள்ளது. அவ்வகையில் பழையோள் முதல் என்று வாராமல் பொருத்தமாக உள்ளது போல் தோன்றுகிறது. -- சுந்தர் \பேச்சு 02:49, 11 ஜூன் 2009 (UTC)
மாந்தரினத்தின் முதல் பெண் என்ற தவறான கருத்தை நிலைநாட்டிவிடாது என்று கருதினால் நீங்கள் முன்னொருமுறை விளக்கிய பச்சையம்மாள், கன்னியம்மாள் போன்ற பெயர்களையும் பயன்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 06:32, 11 ஜூன் 2009 (UTC)
இப்போதைக்கு இழைமணியப் பழையோள் என்ற தலைப்புக்கு நகர்த்திவிடுகிறேன். செல்வாவின் கருத்தை அறிந்து விளக்கத்தையும் மாற்றுப் பயன்பாடுகளையும் சேர்த்துவிடலாம். -- சுந்தர் \பேச்சு 11:43, 26 ஜூன் 2009 (UTC)

பட விளக்கம்[தொகு]

நான் நெடுநேரம் ஆழமாக எண்ணிப் பார்த்து உருவாக்கிய கருத்துப்படம். ஏனோ உரை சரியாக வரவில்லை. பின்னர் சரி செய்ய வேண்டும். இக்கருத்துப்படம் ஆங்கில விக்கியிலும் இல்லை, வேறு தளங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. இதைச் சரி செய்தோமென்றால் தமிழ் விக்கிக்கு மேலுமொரு தனிச்சிறப்பு கிடைக்கும். பின்னூட்டங்களை வரவேற்கிறேன். -- சுந்தர் \பேச்சு 18:47, 23 ஜூலை 2009 (UTC)

மிக அருமையான படம்! பாராட்டுகள்! என் கருத்தை இங்கு பதிவு செய்தேன்.--செல்வா 19:24, 23 ஜூலை 2009 (UTC)