பேச்சு:இலங்கையின் தமிழ் நாடகங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையின் தமிழ் நாடகங்கள்


அறிமுகம்


1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர்‚ இலங்கையின் தமிழ் நாடகங்களின் தோற்றம்‚ தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் மட்டுமல்லாமல் கொழும்பிலும் வளர்ச்சி பெற தொடங்கியது. இலங்கையின் தமிழ் நாடகங்கள் பிரதேசரீதியாக பிரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்‚ கொழும்பு‚ மட்டக்களப்பு‚ மன்னார் மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களின் பாரம்பரிய அடையாளப்படுத்தல்களின் மூலம் இந்நாடகங்கள் வளர்ச்சியடைந்தன. தமிழ் மக்களின் வளர்ச்சிக்கு இலங்கையின் தமிழ் இலத்திரனியல் ஊடகங்கள் பெரும் பங்காற்றி உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலானது இலங்கையின் தமிழ் நாடகங்களின் வளர்ச்சியை குன்றச் செய்துள்ளது.

வரலாறு

இலங்கை

இலங்கையானது 65‚610 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புடைய சிறிய தீவாகும். 2005ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி இலங்கையின் சனத்தொகை 19.7 ஆகும். இலங்கையின் புவியியல் அமைப்பு இந்து சமுத்திரத்தின் மத்தியில்‚ இந்தியாவிற்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. 1505ம் ஆண்டின் காலனித்துவ ஆட்சியை தொடர்ந்த அரசாங்கத்தின் பிரதிபலனாக இலங்கைக்கும்‚ இந்திய உபகண்டத்திற்கும் மற்றும் தெற்காசிய நாடுகளுக்குமிடையே நெருங்கிய உறவுகள் ஏற்படுத்தப்பட்டது. இலங்கையின் நீதித்துறையில் உரோம டச்சு சட்டம் ஆதிக்கம் செலுத்தியதை தொடர்ந்து‚ ஆங்கிலேயரால் 1796ம் ஆண்டு டச்சு சட்டம் நீக்கப்பட்டது. 19ம் நுாற்றாண்டு காலப்பகுதியில் இலங்கையானது பிரித்தானிய முடிக்குரிய காலனித்துவ நாடாக மாற்றமடைந்தது. இக்காலப்பகுதியிலேயே தேயிலை‚ இறப்பர்‚ தெங்கு போன்ற பெருந்தோட்டப் பயிர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் பங்களிப்பு செலுத்தின. 1931ம் ஆண்டு பிரித்தானியரால் தனிநபர் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1948ம் ்ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி இலங்கை சுதந்திரமடைந்தது. 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் திகதி இலங்கையின் 2ஆவது குடியரசு அரசியல்யாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.


மக்கள்

ஜனநாயக சோசலிஸ குடியரசு நாடாகிய இலங்கையில் இன‚ மத ரீதியான வேறுபாடுகள் காணப்படுகின்றன. இலங்கையின் சனத்தொகையில் 74 வீதமானோர் சிங்கள பெளத்த மதத்தை சேர்ந்தவர்களாவர். இவர்கள் இலங்கையின் தென்மேற்கு பகுதியில் அதிகளவில் வாழ்கின்றனர். இலங்கை தமிழர்கள் 12 வீதமானோரும்‚ இந்திய தமிழர்கள் 5 வீதமானோரும் வாழ்கின்றனர். இவர்களுள் பெரும்பான்மையான தமிழர்கள் இந்து மதத்தையும்‚ சிறுபான்மையானவர்கள் இலங்கையின் மத்திய மலை நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்களும் ஆவர். ஏனையோர்களில் 7 வீதமானோர் முஸ்லிம்களாவர். இவர்களுள் சுன்னி முஸ்லிம்கள் அதிகளவில் இலங்கையில் வாழ்கின்றனர். மேலும் பறங்கியர் மற்றும் வேடுவர்களும் கூட வாழ்கின்றனர். 1978ம் ஆண்டின் அரசியல் யாப்பில் பெளத்த மதத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.




உள்நாட்டு பிரச்சினைகள்


விடுதலைப் புலிகளின் இயக்கமானது சுமார் 20 வருடங்களாக தனி நாட்டு கோரிக்கையை முன்வைத்து போராடி வருகிறது.1950ம் ஆண்டுகளில் தமிழ் சிங்கள மக்களுக்கிடையில் ஏற்பட்ட குழப்ப நிலையே இம்முரண்பாடுகளுக்கு காரணமாகும். 1983ம் ஆண்டு 2000 தமிழ் மக்களை கொலை செய்தமைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டமொன்றை தமிழ் மக்கள் கொழும்பில் நடத்தினார்கள். 1987ம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் கடுமையான சூழ்நிலைகளை எதிர்நோக்கியது. இந்த காலப்பகுதியிலேயே இந்து - ஸ்ரீலங்கர ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தத்தின் மூலம் இந்திய இராணுவத்தினருக்கு இலங்கையின் வட பகுதிக்கு வர அனுமதி வழங்கப்பட்டது.

1988ம் ஆண்டு இந்திய இராணுவம் இலங்கை வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்‚ மக்கள் விடுதலை முன்னணியினர் வன்முறைகளில் ஈடுபட்டனர். முக்கள் விடுதலை முன்னணியின் வன்செயல்கள் இலங்கை இராணுவத்தினரை கொடிய முறையில் தாக்குதல் நடத்துவதற்கு துாண்டியது. இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் 10‚000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். அடுத்து வந்த இரு வருட காலப்பகுதியில் நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவியது. எவ்வாறாயினும் கடந்த 15 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட வன்செயல்களால் பாரியளவு உயிர் சேதங்கள் ஏற்பட்டதோடு‚ தமிழர்கள் தமது சமஸ்தானத்தையும் இழந்தார்கள். மேலும் இக்காலகட்டத்தில் தான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம்‚ தீவிரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வன்முறைகள் இடம்பெற்ற போதிலும்‚ கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் இலங்கைக்கான சமாதான பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் சமாதான பேச்சுவார்த்தைகள் முற்றுப் பெறாத வகையில்‚ வன்முறைகள் என்பது இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது.


பரஸ்பர உதவியை நாடி நிற்றலும்‚ நாட்டின் தனித்தன்மையும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம் சுதந்திரமான தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து போராடி வருகிறது. இங்கு தனிநாடாக அழைக்கப்படும் “தமிழ் ஈழம்” என்பது வடபகுதி முனையை அல்லது முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தை குறிக்கிறது. முன்பு சிங்களவர்களும் தமிழர்களும் ஒத்துழைப்புடன் செயற்பட்டார்கள். தொழில் கூட்டுறவு காலப்பகுதியில் சிங்களவர்கள்‚ தமிழர்களை தமது வரலாற்று எதிரிகளாக கருதினார்கள். தமது இன ஒருமைத் தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டது. இதன் பிரதிபலனாக சிங்கள மொழி அரச கரும மொழியாக அமுல்படுத்தப்பட்டது. மேலும் அரசியல் ரீதியாக சிங்கள ஆட்சியின் கீழ் சிங்கள குடியேற்ற நாடாக இலங்கை மாறியது. இதன் பலனாக தமிழர்களின் கலாச்சாரமும்‚ அவர்களின் தனித்தன்மையும் அமுக்கப்பட்டது. ஆனாலும் தமிழர்கள் சமத்துவமும் இன கலாச்சார ரீதியான சமவுரிமைகளும் வழங்கப்பட்டு பேணப்படும் நாடாக இலங்கையை கருதினார்கள்.

சுதேசியர்களான இலங்கைத் தமிழர்கள்‚ இலங்கையில் காணப்பட்ட அடக்குமுறையின் கீழ் மூன்று உப பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். வுட மாகாணத்தில் வாழ்பவர்கள் யாழ்ப்பாண தமிழர்கள் எனவும்‚ கிழக்கு கடற்கரையோரங்களில் வாழ்பவர்கள் மட்டக்களப்பு தமிழர்கள் எனவும்‚ கொழும்பு தமிழர்கள் எனவும் பாகுபடுத்தப்பட்டிருந்தார்கள். வரலாறு‚ சமூக‚ பொருளாதார மற்றும் கலாசார ரீதியான தனித்தன்மை இவர்களிடையே காணப்படுகிறது. எனினும் சிங்கள குடியேற்ற நாட்டில் காணப்பட்ட அடக்குமுறையின் பிரதிபலனாக தமிழர்களின் தனித்தன்மையானது முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் முரண்பாடுகள் காரணமாக பெரும்பாலான தமிழர்கள் தமது சொந்த இடங்களை இழந்துள்ளனர். சிலர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியர மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். சில தமிழ் கலைஞர்கள் கொழும்பில் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இவர்கள் கொழும்பையே இலங்கையின் தமிழ் நாடகங்களுக்கான களமாக கொண்டுள்ளனர். தமது தனித்துவம் ஒடுக்கப்பட்டமையும்‚ சிங்கள கலாச்சாரம் மீதுள்ள ஈர்ப்பும் தமிழர்களின் அடையாளப்படுத்தல் பிரச்சினைக்கு காரணமாக உள்ளது. தமக்கென்ற தாய் நாடு இல்லாத இவர்கள் யார்? ஏன்ற கேள்வியும் இங்கு எழுப்பப்படுகின்றது.

இந்த அடிப்படையில் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விவாதத்தோடு இப்பிரச்சினையை ஒப்பிட்டு பார்க்கலாம். எவ்வாறாயினும் தமிழர்களின் கலாசாரம்‚ அவர்களின் தனித்தன்மை மீதுள்ள கட்டுப்பாடுகளை இலத்திரனியல் ஊடகங்கள் வெளிக் கொண்டு வந்தன. மேலும் தமிழீழம் பற்றிய தகவல்களை வழங்கும் வலைதளங்கள் உருவாக்கப்பட்டன. அவ்வலைதளங்களுக்கு தமிழர்கள் பற்றியும்‚ அவர்களோடு தொடர்புபட்ட சம்பவங்கள் பற்றியும் அறிக்கையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முழு உலகமே தமிழ் மக்களின் நிலமை பற்றி அறிந்துகொள்வதற்கு இவ்வலைதளங்கள் உதவுகின்றன.


நாடகங்களின் தற்போதய நிலமை

நாட்டில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக பெரும்பாலான தமிழ் கலைஞர்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். சிலர் கொழும்பில் வாழ்கின்றனர். மேலும் சிலர் மேற்கு நாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இலங்கையின் தமிழ் நாடகங்களுக்கு கொழும்பே மத்திய நிலையமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கொசோவோவிற்கு கிடைக்கப் பெற்ற சுதந்திரத்தை போலவே தமிழர்களும் சுதந்திரத்தை எதிர்ப்பார்த்துள்ளனர்.