இலங்கையின் தமிழ் நாடகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர்‚ இலங்கையின் தமிழ் நாடகங்களின் தோற்றம்‚ தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் மட்டுமல்லாமல் கொழும்பிலும் வளர்ச்சி பெற தொடங்கியது. இலங்கையின் தமிழ் நாடகங்கள் பிரதேசரீதியாக பிரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்‚ கொழும்பு‚ மட்டக்களப்புமன்னார் மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களின் பாரம்பரிய அடையாளப்படுத்தல்களின் மூலம் இந்நாடகங்கள் வளர்ச்சியடைந்தன. தமிழ் மக்களின் வளர்ச்சிக்கு இலங்கையின் தமிழ் இலத்திரனியல் ஊடகங்கள் பெரும் பங்காற்றி உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலானது இலங்கையின் தமிழ் நாடகங்களின் வளர்ச்சியை குன்றச் செய்துள்ளது.

நாடகங்களின் தற்போதைய நிலமை[தொகு]

நாட்டில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக பெரும்பாலான தமிழ் கலைஞர்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். சிலர் கொழும்பில் வாழ்கின்றனர். மேலும் சிலர் மேற்கு நாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இலங்கையின் தமிழ் நாடகங்களுக்கு கொழும்பே மத்திய நிலையமாக உள்ளது.