பேச்சு:இருவர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் இருவர் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நிரோ, உங்கள் எழுத்து நடை மேம்பட்டு வருகிறது. பாராட்டுக்கள். சில சந்தேகங்கள் - கதை விளக்கத்தில், ஆனந்தனுக்குப் பிறகு தமிழ்ச்செல்வம் அரசியலுக்கு வருவதாக சொல்லி இருக்கிறீர்கள். ஆனால், தமிழ்ச்செல்வம் தான் ஆனந்தனை அரசியலுக்கு அழைத்து வருவதாக இருக்கும் என நினைக்கிறேன். படம் பார்த்து நாளாகிவிட்டது. நினைவில்லை. தவிர, படத்தில் நாசரை அண்ணாதுரை என்று குறிப்பிடுகிறீர்களா? இதுவும் எனக்கு ஐயமே? இருவரும் தனிக்கட்சி துவக்குவதும் இல்லை என நினைக்கிறேன். ஆனந்தன் பிரிந்து சென்று புதுக்கட்சி தொடங்குவதாகத் தான் வரும் என நினைக்கிறேன். உங்களிடம் டிவிடி இருந்தால் சரி பார்க்கவும்--Ravidreams 13:32, 17 நவம்பர் 2006 (UTC)

ஆமாம் உங்கள் கருத்துக்கள் சரியே தவறு ஏற்படுத்தியது நானே.மேலும் நாசர் கொண்ட பாத்திரப்பெயர் தெரியவில்லை.--நிரோஜன் சக்திவேல் 18:00, 17 நவம்பர் 2006 (UTC)

நாசர் தந்தை பெரியாராகவும்,ராஜேஷ் அண்ணா பாத்திரத்தில் நடித்ததாகவும் ஏதோ விமர்சனத்தில் படித்த நியாபகம் மீண்டும் படம் பார்க்க கிடைத்தால் சரியாக என்னால் பதிலளிக்க இயலும் இப்படம் பல இடங்களில் சென்சார் கத்திரிக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தகுந்த விடயமாகும்.--கலாநிதி 16:39, 18 நவம்பர் 2006 (UTC)