பேச்சு:இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டைக்கால மகளிர் உள்ளடக்கத்திலுள்ளவை விடுதலைப் போராட்டத்துக்கு முற்பட்டவை என்பதால் அவ்வுள்ளடக்கத்தை எடுத்து விடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் 05:46, 23 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

அதில் நிறைய மேற்கோள்கள் இருப்பதால் அது பேச்சுப்பக்கத்தில் இருப்பது நல்லது.

நீக்கப்பட்டவை[தொகு]

தமிழக மகளிர் பண்டையக் காலத்தில் வீர வாழ்க்கை வாழந்தமைக்கு பல குறிப்புகள் உள்ளன. நாட்டுப்புற கதைகள் தமிழகத்தில் பழங்காலத்தில் பெண்ணாட்சி இருந்ததாக தெரிவிக்கின்றன. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் சந்திர குப்த மௌரிய மன்னரின் அவைக்கு வந்த கிரேக்க தூதன் மெகஸ்தனிஸ், பாண்டிய நாட்டில் அரசி ஒருவர் ஆட்சி செலுத்தியதை பற்றி தமது இண்டிகாவில் பின்வருமாறு எழுதியுள்ளார். முன்பு பாண்டிய நாட்டில் பாண்டேய என்பவள் ஆண்டு வந்தாள். அப்பகுதி 365 கிராமங்களைக் கொண்டது. அந்த நாடு தென் கடல் வரை பரந்திருந்தது. அவளிடம் 500 யானைகள, 4000 குதிரைகள், 18000 ஆட்கள் கொண்ட படை இருந்தது.1

மேலும் ஆரவல்லி சூரவல்லி பவளக்கொடி முதலிய கதைகள் பழங்காலத்தில் பெண் ஆட்சி நடைப்பெற்றதை நமக்கு விளக்குவனவாய் அமைந்துள்ளன. வேதகாலத்தில் திராவிடப் பெண்கள் படையில் சேர்ந்திருந்ததாக வரலாற்று பேராசிரியர்கள் சான்று காட்டுக்கின்றனர்; சங்க காலத்தில் கொற்றவை என்ற பெண் தெய்வம் போருக்குரிய தெய்வமாக போற்றப்பட்டது. மகளிர் வீரம் நிறைந்தவர்களாக காணப்படினும் போர்க்களத்திற்கு சென்று பகைவரோடு போர் இடுவதற்கு வாள் ஏந்தி செல்லும் வாயப்பினை தந்தை ஆட்சி சமுதாயம் அவர்களுக்கு கொடுத்ததாக இலக்கிய சான்றுகள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் பகைவரிடம் இருந்து தாய் நாட்டை காக்க தம் புதல்வர்கள், கணவர் ஆகியோரை தியாகம் செய்வதை பெருமையாகக் கருதினார்கள். வீரத்திற்கு அவர்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்று பின் வரும் புறநானூற்றுப் பாடல் தெளிவுறுத்துகிறது.

இவளுடைய துணிவு நினைத்தாலே அச்சத்தை கொடுக்கிறது. மறக்குடிமகள் என்பது முற்றிலும் பொருத்தமே. முன்னர் நடந்த போரிலே தந்தை போர்க்களத்தில் யானைகளை கொன்று வீர மரணம் எய்தினான். நேற்று நடந்த போரில் இவள் கணவன் திரளான ஆநிரைகளை காத்து அப்போரில் மாண்டான். இப்போதும் போர்பறை கேட்டு மகிழ்ந்து தன் ஒரே மகனை அழைத்து அவன் குடுமிக்கு எண்ணெய் தடவி வெள்ளாடை அணிவித்து வெற்றியை தரும் வேலினை கையில் கொடுத்து போர் முனை நோக்கி செல்க என போக விடுகின்றாளே என்னே இவளுடைய வீரம்.2

என்று வியந்து பாராட்டுகிறது.


புறநானூற்றில் வேறோரிடத்தில் இடம் பெற்ற சம்பவம் ஒரு வீரனுடைய தாய் தன் மகன் இறந்த திறத்தைக்காண போர்க்களம் சென்றாள். அங்கு எதிர்த்த பகைவர்களைக் கொன்று முடிவில் உடல் வெட்டுண்டு சிதறிக் கிடந்த தன் மகனுடைய வீரச்சிறப்பை கண்டு அப்பெருமிதத்தால் அவளுடைய வற்றிய மார்புகள் மீண்டும் பாலூறிச் சுரந்ததாக ஒளவையார் கூறுகிறார். வயது முதிர்ந்த ஒரு தாயுடைய மகன் போர்க்களத்திற்கு சென்றிருந்தான். அவன் பகைவர் படைக்கண்டு அஞ்சி முதுகில் புண்பட்டு இறந்தான் என்று சிலர் அத்தாயிடம் கூறினர். இதைக் கேட்டவுடன்

காக்கை பாடினியார் பாடுகிறார்.3

பெண்ணெருத்தி ஒரு தாயிடம் சென்று உன் மகன் எங்குள்ளான் என்று கேட்கிறாள். அத்தாய் "புலி தங்கி விட்டு சென்ற குகைபோல பெற்றெடுத்த வயறு இங்கே உள்ளது. ஆனால் அவன் போர்க்களத்தில் தான் காணப்படுவான். ஆதலால் அங்கு சென்று காண்பாயாக." என்று கூறுகின்றாள். மேலும் தன் ஒரே மகனைப் போருக்கு அனுப்பிய தாய் தன் மகன் மார்பில் வேல் பட்டு ஊடுருவி சென்ற புண்ணை புறப் புண்ணென கருதி நாணிச் சூளுரைத்தது பற்றிய செய்தியும் புறப்பாடலில் காணப்படுகின்றது. எனினும் போர்க் காலத்தில் பசு, அந்தணர், நோயாளிகள், முதியோர் ஆகிய வலுவற்றவர்களுடன் பெண்களும் பாதுகாப்பான அரண்களுக்குள் சேர்க்கப்பட்டனர்.

சங்க காலத்தில் பெண்கள் நிலை மிகச் சிறப்பாக இருந்தாலும் காலப்போக்கில் தலைகீழாக மாறியது. கணவன் இறந்தவுடன் மனைவி உயிரோடு உடன்கட்டை ஏறவேண்டும். கைம்பெண் மறுமணம் ஒழுக்கக்கேடு என கருதப்பட்டது. குழந்தைமணம், பொருந்தாமணம், பன்மகளிர்மணம் ஆகிய சமுதாய சாபக்கேடுகள் இந்திய பண்பாட்டில் வலுவுடன் ஆதிக்கம் செலுத்தின. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ஒரு பக்கத்தில் பெண்கள் கற்பை காக்கவேண்டுமென்ற பேரில் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். மறுபக்கத்தில் கடவுளரின் பெயரில் பெண்களுக்கு பொட்டு கட்டுப்பட்டது. விலை மாதர்களாக பெண்கள் கற்பு விற்கப்பட்டது. இன்னும் பல கொடுமைகளுக்குள்ளாகி பெண் உலகம் தத்தளித்துக் கொண்டிருந்தது.

சுருங்கச்சொல்லி விளங்கப்பெறல்[தொகு]

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட பெண்களின் பட்டியல் தொகுத்தபின், ஒவ்வொரு போராளிக்கும் விரிவான கட்டுரை தொகுக்க/துவக்க ஏதுவாகும்.--ஸ்ரீதர் /பேசுக 08:00, 25 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]