உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இதழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

(இது ஒரு சிறு குறிப்பு மட்டுமே. விரிவாக்கம் செய்து, நடை மாற்றமும் செய்ய வேண்டும்)

கிழமை என்றால் உரிமை என்று பொருள். புதனுக்கு உரிமையான நாள் புதன் கிழமை. நிலக்கிழார் என்றால் நிலத்துக்கு உரிமையாளர், சொந்தக்காரர் என்று பொருள். இல்லக்கிழத்தி என்றால் இல்லத்துக்கு உரிமையானவள். கிழவன் என்றால் நெடு நாள் இவ்வுலகிலே வாழ்ந்ததால் அதிக உரிமை (நில உலகில்)என்று உள்ளவன் என்று பொருள். ஏழு நாட்களின் தொகுதி கிழமை என்று அழைக்கிறோம். வாரம் என்பது வடமொழிச் சொல். தாய்மொழிச் சொல்லின் அடிப்படையாக உள்ள சொற்கள் நன்றாக வேறூன்றி பல்கி திளைக்க வாய்ப்புண்டு (இயற்கையும் அதுதான்). தேவை இல்லாமல் வடமொழிச்சொற்களையோ பிறமொழிச் சொற்களையோஆளுவதை (மொழி நலம் குறித்து) தவிர்த்தல் நலம்.

வணக்கம் என்பதற்கு நமஸ்காரம் என்று சொன்னால் தவறில்லை, ஆனால், வணக்கம் என்ற சொல் வழக்கு குன்றும் (வழக்கொழியவும் நேரும்). வணக்கம் என்ற சொல் இருந்தால், அவன் வணகாமுடி, தலைவணங்காதவன், அவனுக்கு வணக்கமே இல்லை, வணங்கி ஒரு வேலையைச் செய் என்ற சொலாட்சிகள் பொருள் படும், வளரும். நமஸ்காரம் என்பதில் இருந்து வருமா? இப்பொழுது வினைச்சொல்லாகவும் நமஸ்கரித்தான் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். இப்போக்குகளால் மொழி நலமும் குன்றும். --C.R.Selvakumar 16:26, 30 மே 2006 (UTC)செல்வா[பதிலளி]

சொல் தேர்வு குறித்து உங்கள் கருத்துக்களை இங்கு சேர்த்தீர்களானால் அந்த கொள்கை முன்வரைவை ஏற்கப்பட்ட கொள்கையாக்க முடியும். -- Sundar \பேச்சு 06:39, 31 மே 2006 (UTC)[பதிலளி]

த.வி வழக்கம் படி இந்தக் கட்டுரை இதழ் என்று அல்லவா அமையவேண்டும்? --Natkeeran 05:19, 20 ஏப்ரல் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இதழ்&oldid=237410" இலிருந்து மீள்விக்கப்பட்டது