பேச்சு:ஆவணகவியல் அறிவியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Archival science இந்தச் சொல் ஈடாகுமா?--Natkeeran 05:11, 2 சனவரி 2011 (UTC)[பதிலளி]

ஆவணவியல் என்பதே போதும் என்று நினைக்கிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 05:12, 2 சனவரி 2011 (UTC)[பதிலளி]
நல்ல சொல்லே Documentation, Archiving இரண்டையும் வேறுபடுத்த வேண்டும். தமிழில் சுவடிவியல் என்று நினைக்கிறன். --Natkeeran 05:14, 2 சனவரி 2011 (UTC)[பதிலளி]

ஆவணம், - Document என்று வருவதால், Documentation ஆவணப்படுத்தல் அல்லது ஆவணவகைகள் என்று வருவதால் archival science என்பதை சுவடிக்குவையியல் அல்லது ஆவணக்குவையியல் என்று கூறலாம் என்று மொழிபெயர்ப்பு வல்லுனர் மணிவேலு அவர்கள் கருத்துக் கூறி உள்ளார். ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு பேணப்பபோதே அதை நாம் Archiving என்று சொல்கிறோம், குவை என்ற சொல் குவியல், களஞ்சியம், கிடங்கு போன்ற பொருட்களை சுட்டி பொருள் சேர்க்கிறது. சுவடித் திணைக்களம் என்ற சொல் இலங்கையில் archival department எனபதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்காலத்தில் சுவடி என்பது manuscript குறிக்கப் பெரிதும் பயன்படுவதால் ஆவணக்குவையியல் என்ற சொல் கூடப் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. --Natkeeran (பேச்சு) 02:54, 9 மார்ச் 2012 (UTC)

கோட்பாடு, முறையியல், செயற்பாடு[தொகு]

  • www.clir.org/pubs/reports/pub89/archival.html

--Natkeeran (பேச்சு) 20:36, 8 ஏப்ரல் 2015 (UTC)

தலைப்புகள் பட்டியல்[தொகு]

  • Archive - ஆவணகம்? ஆவணக் காப்பகம் ? காப்பகம் ? சுவடியகம் ? சுவடிக் காப்பகம்
  • Archivist - காப்பாளர் ? ஆவணக் காப்பாளர்? சுவடிக் காப்பாளர்?
  • Record - பதிவு
  • Archival Description - ஆவணக விபரிப்பு
  • Fond - திரட்டு
  • Sub Fond - துணைத் திரட்டு
  • Collection - சேகரிப்பு
  • Series - தொடர்
  • File - கோப்பு
  • Item - உருப்படி
  • Respect des fonds - திரட்டுக்கு மதிப்பளித்தல்
  • Archival Integrity - ஆவணக நேர்மை
  • Original order - அசல் ஒழுங்கு
  • Finding aid - கண்டுபிடி உதவி
  • Preservation - பாதுகாப்பு
  • Digital preservation - எண்ணிமப் பாதுகாப்பு
  • Accession - ஆவண ஏற்பு
  • Diplomatics - ஆவண ஆராய்ச்சித்துறை
  • Authority control - அதிகாரக் கட்டுப்பாடு
  • Provenance - தோற்றமுதல்
  • Rights - உரிமைகள்