பேச்சு:அஸ்கோ பார்ப்போலா
Untitled
[தொகு]தமிழ் முறைப்படியும், சொல்லுவதற்கு எளிதாகவும் இருக்க பெரும்பாலான இடங்களில் இருந்து கிரந்த எழுத்துகளை நீக்கியுள்ளேன். எப்படி Helium, Helicopter, Hungary ஆகிய சொற்களை, இத்தாலிய மொழி விக்கிப்பீடியா தம் மொழிக்கு ஏற்றவாறு Elio, Elicottero, Ungheria என்று எழுதுகின்றதோ அதுபோல நாம் எல்சின்க்கி அல்லது எல்சிங்க்கி என்று எழுதலாம். சுவீடிய மொழியில் Helsingfors என்கின்றனர். எனவே புறப்பெயர் (exonym) என்னும் வழக்காறு படி நாம் எல்சிங்கி, எல்சின்க்கி, எல்சிங்க்கி என்று ஏதேனும் ஒன்றை எடுத்து ஆளலாம். சொல்லுவதற்கும் எளிமையாக இருக்கும் (வீணே மூச்சை செலவழிக்க வேண்டாம்). --செல்வா 16:42, 7 ஏப்ரல் 2010 (UTC)
பேராசிரியர் பார்ப்போலாவின் பெயர் பற்றி
[தொகு]ஆகத்து 5, 2023 அன்று பேராசிரியர் அசோகன் (வாட்டர்லூ), பேராசிரியர் அசுக்கோ பார்ப்போலா, ஆகியோருடன் நானும் கலந்துகொண்ட ஒரு மின்னஞ்சல் உரையாடலில் தன் மாற்று முதல் பெயரைப் பயன்படுத்து "With best wishes, Asko (“Asokan”)" என்று கையொப்பம் இட்டிருந்தார். தன் பெயரைத் தமிழில் வேண்டியவாறு எழுத்துப்பெயர்ப்பு செய்துகொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். . --செல்வா (பேச்சு) 11:15, 8 ஆகத்து 2023 (UTC)