பேச்சு:அரிமானம்
Appearance
மன்னிக்கவும்; அரிமாணம் அல்லது அரிமானம் - இவற்றுள் எது சரி? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:02, 30 சூன் 2015 (UTC)
- செல்வா, அரிமானம் தான் சரி. இங்கே இது Corrosion என்பதற்கு ஈடாகப் பயன்படுகின்றது. விக்சனரியில் இந்தச் சொல் தரப்படவில்லை. ஆனால், மணவை முஸ்தாபாவின் அறிவியல் அகராதி Corrosionக்கு ஈடாக இச்சொல்லைத் தருகிறது. இலங்கையில் துருப்பிடித்தல் என்னும் சொல்லே பயன்படுகிறது. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் பயன்படும் கலைச்சொல் என்ன? --மயூரநாதன் (பேச்சு) 15:09, 4 சூலை 2015 (UTC)
நன்றி, ஐயா. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட இயந்திரவியல் - இயந்திரப் பொறியியல் கலைச்சொற்கள் எனும் நூலில் தேடியதில், corrosion என்பதற்கு அரிமானம் என்றே தமிழாக்கம் தந்துள்ளார் முனைவர் இராதா. செல்லப்பன். கட்டுரைத் தலைப்பினை திருத்தியுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:49, 5 சூலை 2015 (UTC)