பேச்சு:ஃபோர்ப்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@செல்வா: இக்கட்டுரையைப் போல, பல சொற்கள், ஆய்தம் கொண்டு தொடங்கப்பட்டுள்ளன. அது குறித்த உங்கள் வழிகாட்டுதலைத் தருக உழவன் (உரை) 00:48, 15 மார்ச் 2017 (UTC)[பதில் அளி]

போர்புசு என்று எழுதலாம் என்பது என் கருத்து. ஃகா = Ha என வருவதை ஆ என்றே எழுதலாம். அனுமான், இமயமலை, இரணியகர்பன் என்று எழுதுவது போல உயிரொலியை மட்டுமே கொண்டு எழுதலாம். இத்தாலியம் போன்ற மொழிகளிலும் இப்படித்தான் எழுதுகின்றனர். பிரான்சிய மொழியில் Hollande, Hospital என்பதை ஒல்லாண்டு, ஆப்பிட்டல் என்றுதான் ஒலிக்கின்றார்கள். ஒலித்திரிபு இயற்கையே, அது தமிழில் இயல்பாகவும் இருக்கும். Coffee என்பதை காப்பி என்று சொல்வதும் Office என்பதை ஆபீசு என்று சொல்வதும் வழக்கமே --செல்வா (பேச்சு) 00:57, 15 மார்ச் 2017 (UTC)[பதில் அளி]
மிக்க நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவில் இதுவரை உள்ள கட்டுரைகளில் ஃ கொண்டு தொடங்கும் கட்டுரைகளை, ஒரு பகுப்பில் குவித்த பிறகு உங்களது வழிகாட்டல் தேவைப்படும். மீண்டும் சந்திக்கிறேன் வணக்கம்.உழவன் (உரை) 01:01, 15 மார்ச் 2017 (UTC)[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஃபோர்ப்ஸ்&oldid=2201645" இருந்து மீள்விக்கப்பட்டது