பேச்சில்லா கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேச்சில்லா கிராமம் என்பது மக்கள் வசிக்காத, ஆவணங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ள ஊர்களைக் குறிக்கிறது. இத்தகைய ஊர்கள் ஒரு காலத்தில் மக்கள் வசிப்பிடங்களாக இருந்து, படையெடுப்புகள், கொள்ளை நிகழ்வுகள், கொள்ளை நோய்கள்; அணைகள், சுரங்கங்கள் போன்ற பெரிய கட்டுமானங்களுக்கான நிலம் கையகப்படுத்தல்; வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்கள் எனப் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட இடப்பெயர்வின் காரணமாக பேச்சற்றுப் (ஆளரவம்) போனவையாகும்.[1]

தமிழ்நாட்டிலுள்ள சில பேச்சில்லா ஊர்கள்[தொகு]

(இது முழுமையான பட்டியல் அல்ல)

  1. வேலாம்பூர் (மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி ஒன்றியம்)
  2. சிறுதூர் (மதுரை மாவட்டம்)
  3. ஆயகுளம் (விருதுநகர் மாவட்டம்)[1]
  4. தவளைக்குளம் (சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம்)[2]

மக்கட்தொகை கணக்கெடுப்பில்[தொகு]

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011இல் ஆட்கள் வசிக்காத கிராமங்கள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டு இனங்காணப் பட்டன:

  1. கட்டிடங்கள் போன்ற கட்டுமானங்கள், சிதிலங்கள் உள்ளவை
  2. கட்டிடங்கள் போன்ற கட்டுமானங்கள், சிதிலங்கள் அற்றவை[3]

இந்தியாவின் பிற பகுதிகளில்[தொகு]

இந்தியாவின் பிற பகுதிகளில் ஆட்கள் வசிக்காத இத்தகைய கைவிடப்பட்ட ஊர்கள் பே-சிராக் (बेचिराग) கிராமங்கள், அதாவது விளக்கேற்றப்படாத ஒளியிழந்த ஊர்கள் எனக் குறிக்கப்படுகின்றன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "பேச்சில்லா கிராமங்கள்". பொங்கல் மலர். தினமலர். சனவரி 15, 2015. http://mobile.dinamalar.in/supplementary_detail.asp?id=23515&ncat=12. பார்த்த நாள்: திசம்பர் 20, 2015. 
  2. "எல்லோராலும் பேசப்படும் "பேச்சில்லா கிராமம்":பே(ஊ)ருண்டு; வசிப்பதற்கு ஆளில்லை". தினமலர். திசம்பர் 25, 2012. http://www.dinamalar.com/news_detail.asp?id=613629&Print=1. பார்த்த நாள்: திசம்பர் 20, 2015. 
  3. "FAQ for Enumerator Vol - 3". இந்திய தலைமைப் பதிவாளர் & மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம். பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 20, 2015.
  4. "Land Records Terminology in India". அசெட்யோகி. காம். பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 20, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சில்லா_கிராமம்&oldid=1985373" இலிருந்து மீள்விக்கப்பட்டது