உள்ளடக்கத்துக்குச் செல்

பேக்கரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேக்கரைட்டு
Bakerite
பேக்கரைடு மாதிரி
பொதுவானாவை
வகைநியோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுCa4B4(BO4)(SiO4)3(OH)3·H2O
இனங்காணல்
நிறம்நிறமற்றதாக,வெண்மையாக
படிக அமைப்புஒற்ரைச் சரிவு
மோவின் அளவுகோல் வலிமை
மிளிர்வுகண்ணாடித் தன்மை,மந்தம்
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி2.88
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.624 nβ = 1.635 nγ = 1.654
இரட்டை ஒளிவிலகல்δ = 0.030
2V கோணம்Measured: 87° to 88°


பேக்கரைட்டு (Bakerite) என்பது Ca4B4(BO4)(SiO4)3(OH)3•(H2O)) என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். நீரேறிய கால்சியம் போரோ-சிலிக்கேட்டு ஐதராக்சைடுக்கு பேக்கரைட்டு என்ற பொதுப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள பேக்கரில், எரிமலைப் பாறைகளில் இக்கனிமம் கிடைக்கிறது [1].

ஐக்கிய அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் இன்யோ மாகாணத்திலுள்ள, பேர்னாசு கிறீக் மாவட்ட, சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில், கார்க்சுகிரியு கேன்யன் சுரங்கத்தில் 1903 ஆம் ஆண்டு முதன்முதலாக இக்கனிமம் கண்டறியப்பட்டது.[2] பசிபிக் கடற்கரை போராக்சு நிறுவனத்தின் இயக்குனர் இரிச்சார்டு சி.பேக்கர் கண்டறிந்த காரணத்தால் இக்கனிமத்திற்குப் பேக்கரைட்டு என்ற பெயர் வைக்கப்பட்டது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bakerite mineral data". WebMineral.com. Archived from the original on 5 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-05-08.
  2. Mindat.org
  3. Handbook of Mineralogy
  4. Hildebrand, GH. (1982) Borax Pioneer: Francis Marion Smith. San Diego: Howell-North Books. p. 89. (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8310-7148-6)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேக்கரைட்டு&oldid=3587723" இலிருந்து மீள்விக்கப்பட்டது