பெற்றோசோ தமிழ் வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெற்றோசோ தமிழ் வித்தியாலயம்
பெற்றோசோ தமிழ் வித்தியாலயம்.jpg
அமைவிடம்
பொகவந்தலாவை, இலங்கை
தகவல்
வகைஅரசுப் பள்ளி
குறிக்கோள்கற்று உழைத்து உயர்
தொடக்கம்1925
அதிபர்விக்டர்
தரங்கள்1–11
மாணவர்கள்370 வரை
நிறம்கபில நிறம்
இணையம்

அறிமுகம்[தொகு]

Fetteresso Tamil Vidyalaya Map.jpg

பெற்றோசோ தமிழ் வித்தியாலயம் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் வலயத்தில் அமைந்துள்ளது. பொகவந்தலாவை நகரத்தில் இருந்து பலாங்கொடை பாதையில் சுமார் எட்டு கிலோமீற்றர் தூரத்தில் பெற்றோசோ தோட்டத்தின் அருகாமையில் இப்பாடசாலை அமைந்துள்ளது.கலவன் பாடசாலையாக காணப்படும் இப்பாடசாலையில் ஆண்களும், பெண்களுமாக சுமார் 350 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அதிபர் உட்பட 17 ஆசிரியர்கள் தற்போது (2017ல்) கடமைப்புரிகின்றனர். தரம் ஒன்று முதல் தரம் பதினொன்று வரையிலான வகுப்புக்கள் இப்பாடசாலையில் காணப்படுகின்றன.

வரலாறு[தொகு]

இப்பாடசலை 1925ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அதற்கான எழுத்தாவணங்கள் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் இப்பாடசாலையில் தரம் ஐந்துவரையான வகுப்புக்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. படிப்படியாக முன்னேற்றம் கண்டு இன்று க.பொ.த சாதாரண தரம் வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றது.

இவர்களது கல்வி நடவடிக்கைளைப் பார்வையிடுவதற்கு கல்வி அதிகாரிகளாக இன்ஸ்பெக்டர்கள் காணப்பட்டனர். பரீட்சையின் போது வருகைத்தரும் அதிகாரிகள் பல்வேறு வினாக்களை வினவுவதன் மூலம் மாணவர்களின் சித்தி பெறுபேற்றினைத் தீர்மானிப்பர். இவ்வாறு அன்றையக் கால கல்வி நடவடிக்கைகள் காணப்பட்டன. மாணவர்களை ஒவ்வொரு வீடாக சென்று மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துவந்து அவர்களது கல்வி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ஒரு கட்டிடத்தில் இயங்கிய இப்பாடசாலைக்கு சீடா செயற்றிட்டத்தினால் 1992ம் ஆண்டு மேலும் ஒரு கட்டிடம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு இப்பாடசாலைக்கு ஒரு கனிணி அறை அமைக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு இப்பாடசாலைக்கு ஒரு புதிய கட்டிடம் கிடைத்துள்ளது.

கடமையாற்றிய அதிபர்கள்[தொகு]

தொ.இல பெயர் இருந்து வரை
1 திருமதி சிவகுரு 1970 1974
2 திருமதி அந்தனி 1974 1986
3 திருமதி ஜெயசிங் 1977 1981
4 பாலசுப்ரமணியம் 1985 1986
5 திருமதி ராஜகோபால் 1982 1985
6 ராஜேஸ்வரி 1986 2000
7 ஜெயராமன் 2000 2003
8 அடைக்கலமேரி 2003 2004
9 விக்டர் 2004 இன்றுவரை

பாடசாலை கீதம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

[1]

  1. பெற்றோசோ பாடசாலையின் கல்வி வளர்ச்சி