பெர்புரோமேட்டு
பெர்புரோமேட்டு (Perbromate) அயனி BrO−4. என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஓர் எதிர்மின் அயனியாகும். புரோமின் தனிமத்தின் ஆக்சி எதிர்மின் அயனியாகக் கருதப்படும் இது பெர்புரோமிக் அமிலத்தினுடைய இணை காரமாகவும் கருதப்படுகிறது. +7 என்ற ஆக்சிசனேற்ற நிலையை புரோமின் இதில் வெளிப்படுத்துகிறது [1]. இதனுடைய குளோரின் மற்றும் அயோடின் ஒத்த பெர்குளோரேட்டு, பெர் அயோடேட்டு தயாரிப்பது போல இதனை தயாரிப்பது எளிதன்று [2]. இந்த அயனி நான்முகி மூலக்கூற்று வடிவத்தை ஏற்றுள்ளது [3]. BrO−4 எதிர்மின் அயனியை அல்லது –OBrO3 என்ற வேதிவினைக் குழுவைக் கொண்டுள்ள சேர்மம் பெர்புரோமேட்டு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பெர்புரோமேட்டு ஒரு வலிமையான ஆக்சிசனேற்றும் முகவராகும் [2]. BrO−4/Br− இணையின் குறைப்பு மின்னழுத்தம் pH 14 இல் +0.68 வோல்ட்டு ஆகும். இந்த அளவு செலீனைட்டின் குறைப்பு மின்னழுத்தத்துடன் ஒப்பிட்டு நோக்கத் தக்கது ஆகும்.
தயாரிப்பு
[தொகு]பெர்புரோமேட்டைத் தயாரிக்க 1968 இல் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் வெற்றியடையவில்லை.கடைசியாக செலீனேட்டு உப்பிலுள்ள செலீனியம்-83 இன் பீட்ட சிதைவு மூலமே இதைத் தயாரித்தார்கள்[4][5]
- 83
SeO2−
4 → 83
BrO−
4 + β−.
இம்முறையைத் தொடர்ந்து LiBrO3 சேர்மத்தை மின்னாற்பகுப்பு செய்தும் பெர்புரோமேட்டு அயனியைத் தயாரித்தனர். இம்முறையில் குறைந்த அளவிலேயே விளைபொருளாக பெர்புரோமேட்டு கிடைக்கிறது [5][6] பிற்காலத்தில் புரோமேட்டுடன் செனான் டைபுளோரைடு சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்து பெர்புரோமேட்டு தயாரிக்கப்பட்டது [3][7]. ஒருமுறை பெர்புரோமேட்டைத் தயாரித்து விட்டால் இதை புரோட்டானேற்றம் செய்து பெர்புரோமிக் அமிலத்தைத் தயாரிக்க இயலும் [2]. கார நிபந்தனைகளின் உதவியோடு புரோமேட்டை புளோரினுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்யும் முறையில் பெர்புரோமேட்டு தயாரிப்பது ஒரு சரியான வழிமுறையாகக் கருதப்படுகிறது :[2][8]
- BrO−
3 + F
2 + 2 OH−
→ BrO−
4 + 2 F−
+ H
2O.
செனான் டைபுளோரைடு சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்து தயாரிக்கும் வழிமுறையைக் காட்டிலும் இம்முறை பெர்புரோமேட்டை பெருமளவில் தயாரிப்பதற்கு உகந்ததாக உள்ளது [8]. 2011 ஆம் ஆண்டில் பெர்புரோமேட்டைத் தயாரிப்பதற்கான ஒரு நவீன முறை கண்டறியப்பட்டது கார சோடியம் ஐப்போ புரோமைட்டு கரைசலில் ஐப்போபுரோமைட்டுடன் புரோமேட்டு அயனிகளைச் சேர்த்து வினைபுரியச் செய்வது இம்முறையாகும் [9]. காரக் கரைசலிலுள்ள டைபெர் அயோடேட்டோ நிக்கலேட்டு எதிர்மின் அயனிகள் புரோமேட்டை பெர்புரோமேட்டுகளாக ஆக்சிசனேற்றமடையச் செய்கின்றன. இம்முறை மிகவும் சிக்கனமான முறையாகவும் புளோரின் கலப்பில்லாத முறையாகவும் கருதப்படுகிறது [10].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Egon Wiberg; Nils Wiberg; Arnold Frederick Holleman (2001). Inorganic chemistry. Academic Press. p. 439. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
- ↑ 2.0 2.1 2.2 2.3 W. Henderson (2000). Main group chemistry (Volume 3 of Tutorial chemistry texts). Royal Society of Chemistry. pp. 136–137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85404-617-8.
- ↑ 3.0 3.1 Kurt H. Stern (2001). High temperature properties and thermal decomposition of inorganic salts with oxyanions. CRC Press. p. 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0256-0.
- ↑ Appelman, E. H. (1973). "Nonexistent compounds. Two case histories". Accounts of Chemical Research 6 (4): 113–117. doi:10.1021/ar50064a001.
- ↑ 5.0 5.1 Appelman, E. H. (1968). "Synthesis of perbromates". Journal of the American Chemical Society 90 (7): 1900–1901. doi:10.1021/ja01009a040.
- ↑ Kenneth Malcolm Mackay; W. Henderson (2002). Rosemary Ann Mackay (ed.). Introduction to modern inorganic chemistry (6th ed.). CRC Press. p. 488. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7487-6420-8.
- ↑ Egon Wiberg; Nils Wiberg; Arnold Frederick Holleman (2001). Inorganic chemistry. Academic Press. p. 395. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
- ↑ 8.0 8.1 Appelman, E. H. (1969). "Perbromic acid and perbromates: synthesis and some properties". Inorg. Chem. 8 (2): 223–227. doi:10.1021/ic50072a008.
- ↑ Pisarenko, Aleksey N.; Young, Robert; Quiñones, Oscar; J. Vanderford, Brett; B. Mawhinney, Douglas (2011). "Two New Methods of Synthesis for the Perbromate Ion: Chemistry and Determination by LC-MS/MS". Inorg. Chem. 50 (18): 8691–8693. doi:10.1021/ic201329q. பப்மெட்:21780765.
- ↑ Bilehal, Dinesh C.; Kulkarni, Raviraj M.; Nandibewoor, Sharanappa T. (January 2002). "Kinetics and Mechanism of Oxidation of Bromate by Diperiodatonickelate(IV) in Aqueous Alkaline Medium--A Simple Method for Formation of Perbromate". Inorganic Reaction Mechanisms 4 (1–2): 103–109. doi:10.1080/1028662021000020244.