பெர்பர் தேரை
பெர்பர் தேரை
Berber toad | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | நீர்நில வாழ்வன |
வரிசை: | வாலற்றவை |
குடும்பம்: | பபோனிடே |
பேரினம்: | இசுகிளிரோபைரசு |
சிற்றினம்: | இ. மாவுரிடேனிகா
|
இருசொற் பெயரீடு | |
இசுகிளிரோபைரசு மாவுரிடேனிகா செலிகள், 1841[2] | |
வேறு பெயர்கள்[2] | |
|
பெர்பர் தேரை (Berber toad), என்பது மொரிஷியனியன் தேரை, மொராக்கோ தேரை, பேந்தெரினி தேரை அல்லது மூரிஷ் தேரை (இசுகிளிரோபைரசு மாவுரிடேனிகா-Sclerophrys mauritanica) எனப்படுகிறது.[2] தேரை குடும்பமான பபோனிடேவைச் சார்ந்த இந்த தேரை வடமேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இத்தேரையினம் தெற்கு எசுப்பானியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
விளக்கம்
[தொகு]பெர்பர் தேரை ஒரு பெரிய வகைத் தேரையாகும். இதனுடைய நீளம் 13 முதல்15 செமீ வரை இருக்கும். உடலின் மேற்பகுதியில் பெரிய அளவிலான ஆரஞ்சு அல்லது சிவப்பு புள்ளிகள் காணப்படும். உடலின் அடிப்பகுதியில் சிறிய சாம்பல் புள்ளிகளுடன் வெள்ளை நிறத்தில் இருக்கும். இது பல வண்ண வண்ண உருவங்களில் காணப்படுகிறது. பின்புற நிறம் பழுப்பு, ஆலிவ், ஆரஞ்சு அல்லது சிவப்பு பழுப்பு ஆகியவற்றின் இருண்ட திட்டுகளிலிருந்து வெற்று மணல் நிறம் வரை மாறுபடும். [3]
பரவல்
[தொகு]வட மேற்கு ஆபிரிக்காவில் காணப்படும் பெர்பர் தேரை, மொராக்கோவில் கிழக்கு நோக்கி அல்சீரியா வழியாக தூனிசியாவிலும், தெற்கே மேற்கு சகாராவிலும் வடக்கு பகுதியிலும் காணப்படுகிறது. இருப்பினும் இத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.[1] அல்ஜெசிராசுக்கு அருகிலுள்ள லாஸ் அல்கோர்னோகேல்ஸ் இயற்கை பூங்காவிற்கு அருகில் ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்ட தேரைகள் காணப்படுகின்றன.[4]
வாழ்விடம்
[தொகு]இதன் இயற் வாழ்விடங்களாக மித வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் கார்க் ஓக் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர்நிலங்கள், ஆறுகள், நன்னீர் சதுப்பு நிலங்கள், இடைப்பட்ட நன்னீர் சதுப்பு நிலங்கள், விளைநிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், தோட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்கள். [5] பெர்பர் தேரைகள் அட்லசு மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 2,650 மீட்டர் உயரத்தில் வாழ்கின்றன.[1]
பழக்கம்
[தொகு]இது மெதுவாக ஓடும் நன்னீர் அல்லது உவர்ப்பு நீரோடைகளில் இனப்பெருக்கம் செய்கிறது. பெண்கள் சுமார் 5,000-10,000 முட்டைகளை இடுகின்றன. பகலில் முதிர்ச்சியடைந்த தவளைகள் பாறைகளின் கீழ் அல்லது பள்ளங்களில் மறைந்து காணப்படும்.[5]
வகைபாட்டியல்
[தொகு]இது முதன் முதலில் பபோ பேரினத்தின் கீழ் வைக்கப்பட்டது. ஆனால் ஆப்பிரிக்க அமிடோப்ரைனசு என 2009ல் 20 குரோமோசோம்க்கான "பபோ" வில் மாற்றப்பட்டது. பின்னர் ஸ்கிளிரொபைரசு என மறுபெயரிடப்பட்டது. இதனால் அமிஎடோப்ரைனசு, ஸ்கிளிரொபைரசின் வேறுபெயராக உள்ளது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Amietophrynus mauritanicus". IUCN Red List of Threatened Species. Retrieved 2016-11-13.
- ↑ 2.0 2.1 2.2 Frost, Darrel R. "Sclerophrys mauritanica (Schlegel, 1841)". Amphibian Species of the World 6.0, an Online Reference. American Museum of Natural History. Retrieved 2016-11-13.
- ↑ "Bufo mauritanicus". Encyclopedia of Life. பார்க்கப்பட்ட நாள் 2016-11-13.
- ↑ Christopher Lever (2003). Naturalized Reptiles and Amphibians of the World. Oxford University Press. p. 176. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0198507712.
- ↑ 5.0 5.1 "Sclerophrys mauritanica". Amphibiaweb. பார்க்கப்பட்ட நாள் 2016-11-13.
- ↑ Frost, Darrel R. (2016). "Sclerophrys Tschudi, 1838". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.