பெர்னி மாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Bernie Mac
பெர்னி மாக்
BernieMacSoulMenMarch08.jpg
ஓஷன்ஸ் 13 திரைப்படத்தின் திறக்கும் விழாவில் பெர்னி மாக்
இயற் பெயர் பெர்னார்ட் ஜெஃப்ரி மெக்கல
பிறப்பு அக்டோபர் 5, 1957(1957-10-05)
சிக்காகோ, இலினொய், அமெரிக்கா
இறப்பு ஆகஸ்ட் 9, 2008 (அகவை 50)[1]
சிக்காகோ, இலினொய், அமெரிக்கா
தொழில் நடிகர், மேடைச் சிரிப்புரையாளர்
நடிப்புக் காலம் 1977–2008
துணைவர் ரான்டா மெக்கல (1977–2008)

பெர்னி மாக் (Bernie Mac), பிறப்பு பெர்னார்ட் ஜெஃப்ரி மெக்கல (அக்டோபர் 5, 1957-ஆகஸ்ட் 9, 2008) ஒரு அமெரிக்க நடிகரும் மேடைச் சிரிப்புரையாளரும் ஆவார்.

சிக்காகோவில் பிறந்த பெர்னி மாக் முதலாக மேடைச் சிரிப்புரையாளராக பணி புரிந்தார். எச்.பி.ஓ. தொலைக்காட்சியில் டெஃப் காமெடி ஜாம் என்ற நிகழ்ச்சியில் மேடைச் சிரிப்புரை செய்து புகழுக்கு வந்தார். 1990களில் நடித்த ஆரம்பித்து 1995இல் ஐஸ் கியூப் உடன் ஃப்ரைடே (Friday) திரைப்படத்தில் நடித்து திரைப்பட உலகத்தில் புகழுக்கு வந்தார். இதற்கு பிறகு ஓஷன்ஸ் 11, மிஸ்டர் 3000, பாட் சான்டா, பூடி கால் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2001இல் ஃபாக்ஸ் தொலைக்காட்சியில் த பெர்னி மாக் ஷோ என்று ஒரு நகைச்சுவை தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். 2006 வரை இத்தொடர் காணப்பட்டது.

2008இல் நுரையீரலழற்சி நோய் காரணமாக இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Death என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்னி_மாக்&oldid=1350708" இருந்து மீள்விக்கப்பட்டது