பெர்த்தா பென்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெர்த்தா ரிங்கர் 1871-இல் இவர் கார்ல் பென்சின் கூட்டாளியானார்

பெர்த்தா பென்சு (பெர்த்தா பென்ஸ், Bertha Benz) செருமனியில் உள்ள பார்சீமில் 1849-ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் நாள் பிறந்தார். இவர் புத்தாக்குனரான கார்ல் பென்சை 1872 சூலை 20-இல் மணந்தார். 1944-ஆம் ஆண்டு மே 5-ஆம் நாள் லேடன்பெர்கு என்னும் ஊரில் மறைந்தார். இவர் 1871-ஆம் ஆண்டு கார்ல் பென்சின் தொழிலில் முதலீடு செய்தார். இது பென்சின் முதல் காப்புரிமை பெற்ற தானுந்தை உருவாக்க ஏதுவாக இருந்தது. மேலும் 1888-இல் இவர் ஒரு தானுந்தை நீண்ட தொலைவு ஓட்டிய முதல் மனிதராக விளங்கினார். இவரது இச்செயலினால் இவர்களது பென்சு தானுந்து உலகளாவிய கவனம் பெற்றது.

இவருக்கும் கார்ல் பென்சுக்கும் ஐந்து குழந்தைகள் இருந்தனர். யூகன், ரிச்சர்டு, கிளாரா, தில்டே, எல்லென் ஆகியோரே இவர்களது மக்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்த்தா_பென்சு&oldid=1369240" இருந்து மீள்விக்கப்பட்டது