பெர்கின் மறுசீரமைப்பு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெர்கின் மறுசீரமைப்பு வினை (Perkin rearrangement) என்பது கரிம வேதியியலில், நிகழும் ஒரு மறு சீரமைப்பு வினையைக் குறிக்கும். கூமாரின்-பென்சோபியூரான் வளையச் சுருக்க வினை என்ற பெயராலும் இவ்வினை அறியப்படுகிறது.


இவ்வினையில் ஓர் ஐதராக்சைடின் முன்னிலையில் 2-ஆலோ கூமாரின் சேர்மம் ஒரு வளையச் சுருக்கத்திற்கு உட்பட்டு பென்சோபியூரானை உருவாக்குகிறது.. இப்பெயர் வினை வில்லியம் என்றி பெர்கினை அங்கீகரிக்கிறது,. இவர் அதை முதன்முதலில் 1870 ஆம் ஆண்டில் அறிவித்தார். பெர்கின் மறுசீரமைப்பு' வினையின் பொறிமுறைக்கு பல முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன, இவை அனைத்தும் கார்பாக்சிலேட்டு மற்றும் பினோலேட்டைக் கொடுக்க லாக்டோனின் ஆரம்ப திறப்பை உள்ளடக்கியவையாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Marriott, Karla-Sue C.; Bartee, Rena; Morrison, Andrew Z.; Stewart, Leonard; Wesby, Julian (2012). "Expedited Synthesis of Benzofuran-2-Carboxylic Acids via Microwave-Assisted Perkin Rearrangement Reaction". Tetrahedron Lett. 53 (26): 3319–3321. doi:10.1016/j.tetlet.2012.04.075. பப்மெட்:22736873.