உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்காமோ பேரங்காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெர்காமோ பேரங்காடி (Bergamo shopping mall) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னை நகரத்தின் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகமாகும். காதர் நவாசு கான் சாலையில் 30000 சதுர அடி பரப்பளவில் இப்பேரங்காடி அமைந்துள்ளது.[1][2] 2012 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் சென்னையில் பெர்காமோ பேரங்காடி திறக்கப்பட்டது.[3] பிரான்சு நாட்டின் பாரிசு நகரை தலைமையிடமாகக் கொண்ட இலூயிசு உய்ட்டன் என்ற ஆடம்பரமான கடை இதன் முதல் கடையாகத் திறக்கப்பட்டது.[4] பிரபலமான டி.எசு.பி. கட்டடக் கலை நிறுவனம் பெர்காமோ பேரங்காடியை வடிவமைத்தது. சென்னையைச் சேர்ந்த கே.கே.ஏ. கட்டுமான நிறுவனத்தினர் 10 கோடி ரூபாய் செலவில் அங்காடியை கட்டி முடித்தனர்.[5] இத்தாலிய நகரமான பெர்காமோவின் பெயர் சூட்டப்பட்டிருக்கும்[5] இந்த பேரங்காடி சென்னையின் முதல் ஆடம்பரமான பேரங்காடியாகவும்[5][6] இந்தியாவின் மூன்றாவது ஆடம்பர பேரங்காடியாகவும் கருதப்படுகிறது.[7] 1600 முதல் 2000 சதுர அடிகள் வரை பரப்பளவு கொண்ட 24 கடைகள் பேரங்காடியில் உள்ளன.[8] இங்குள்ள வெள்ளை நிற மூன்று அடுக்கு கட்டடம் பாரம்பரிய இத்தாலிய கட்டிடக்கலையின் பாதிப்போடு உருவாக்கப்பட்டுள்ளது.[6][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bergamo (shopping mall)".
  2. "Bergamo Chennai".
  3. "Bergamo Details".
  4. Reddy, T. Krithika (6 August 2012). "Bagful of beauty". தி இந்து. http://www.thehindu.com/life-and-style/leisure/article3734510.ece. பார்த்த நாள்: 3 November 2012. 
  5. 5.0 5.1 5.2 "Bergamo shopping centre in Chennai". தி இந்து. 3 June 2009 இம் மூலத்தில் இருந்து 7 ஜூன் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090607192640/http://www.hindu.com/2009/06/03/stories/2009060351181400.htm. பார்த்த நாள்: 3 November 2012. 
  6. 6.0 6.1 Mathai, Kamini (4 August 2012). "Stylish in the south". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா The Crest Edition இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121027032607/http://www.timescrest.com/life/stylish-in-the-south-8451. பார்த்த நாள்: 3 November 2012. 
  7. "Luxury mall in Chennai". The Hindu Business Line. 31 May 2009. http://www.thehindubusinessline.in/iw/2009/05/31/stories/2009053150541500.htm. பார்த்த நாள்: 3 November 2012. 
  8. Aparna Ramalingam (24 September 2009). "Rentals in city's high streets". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Chennai) இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103135629/http://articles.timesofindia.indiatimes.com/2009-09-24/chennai/28102171_1_luxury-brands-high-streets-rentals. பார்த்த நாள்: 3 November 2012. 
  9. Indulekha Aravind (27 October 2012). "Chennai swank". Business Standard. http://www.business-standard.com/india/news/chennai-swank/490809/. பார்த்த நாள்: 3 November 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்காமோ_பேரங்காடி&oldid=3742431" இலிருந்து மீள்விக்கப்பட்டது