பெரோஸ் (கிடாரைட்டு வம்சம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரோஸ்
"பெரோஸ்" (Pi-ro-ysa) ( குப்தர் எழுத்துமுறையில் ) என்ற பெயர் "காந்தாரப் பகுதிகளில்" கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் காணப்படுகிறது, இது கிடாரைட்டுகளுக்கு சொந்தமானது என்று கருதப்படுகிறது. மற்றொரு பக்கம் செங்குத்தாக:
வலது புறம்:கா-தா-கா-ரா என எழுதப்பட்டுள்ளது
மத்தியில்: பிரொய்சா ( என்ற பெயர் காணப்படுகிறது. அனேகமாக இது பெரோஸ் எனக் கருதலாம்.[1]
இடது புறம்: இதன் பொருள் அறியப்படவில்லை. ஆனால் கு-சா-னா என படிக்கப்படுகிறது.[2] சுமார் 350-375 பொ.ச.
கிடாரைட்டுகள்
ஆட்சிக்காலம்சுமார் 350-360 பொ.ச.
முன்னையவர்கிரடா
பின்னையவர்முதலாம் கிடாரன்

பெரோஸ் ( Peroz) ( குப்தர் எழுத்துமுறையில் )[3] ஆரம்ப கால கிடாரைட் ஆட்சியாளர் ஆவார். இவர் குசான-சாசானியர்களுக்குப் பிறகு, சுமார் பொ.ச.350-360 இல் காந்தாரத்தில் ஆட்சி செய்தார்.[4]

ஆட்சி[தொகு]

குசான-சாசானியர்களின் ஆட்சி, பொ.ச. 4-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முடிவடைந்தது. [5] அவர்கள் தங்கள் பகுதிகளை கிடாரைட்டுகளிடம் இழந்தனர். [6]

பெரோஸ் முதல் கிடாரைட்டு ஆட்சியாளர் கிரடாவின் வாரிசு ஆவார். மேலும் பிரபலமான கிடாரைட்டு ஆட்சியாளர் முதலாம் கிடாரனின் உடனடி முன்னோடி ஆவார்.[4] இவர் குசான சாசானிய குசான்ஷா ஆட்சியாளர்களில் கடைசி ஒருவராக முன்னர் கருதப்பட்டார்.

"குசானர்களின் மன்னர்" எனப்பொருள் தரும் "குசான்ஷா" என்ற பட்டத்தைப் பயன்படுத்தி இவர் தனது சொந்த நாணயங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

அமிடா முற்றுகை (359 பொ.ச.)[தொகு]

பொ.ச.359-இல் இவர், அமிடா மீது தாக்குதல் நடத்தியதாக வரலாற்றாசிரியர் கோடாதாத் ரெசாகானி கூறுகிறார். அங்கு கிரம்பேட்சின் கீழ் ஒரு கிடாரைட்டு இராணுவம் உரோமானியர்களால் கைப்பற்றப்பட்ட நகரத்தை முற்றுகையிட இரண்டாம் சாபூரின் சாசானிய இராணுவத்திற்கு ஆதரவளித்ததாக அறியப்படுகிறது.[7] வரலாற்றாசிரியர் அம்மியனஸ் மார்செலினஸ் இவரது ஆடையைப் பற்றியும், இவரது தலைக்கவசத்தைப் பற்றியும் விவரிக்கிறார்.[8]

ஆட்டுக் கொம்புகள் கொண்ட தலைக்கவசம் அணிந்த பெரோஸ், 359 பொ.ச.வில் அம்மியனஸ் மார்செலினஸ் என்பவரால் அமிடா முற்றுகையின் போது கவனிக்கப்பட்டிருக்கலாம்.[9]

இந்த ஆட்சியாளர் பாரம்பரியமாக இரண்டாம் சாபூர் என்று கருதப்படுகிறார். இருப்பினும் அம்மனுஸ் மார்செலினஸ் வெளிப்படையாக அவ்வாறு கூறவில்லை, மேலும் சாபூரின் பாரம்பரிய தலைக்கவசமும், கிரீடமும் மிகவும் வித்தியாசமானது. [10] செம்மறியாட்டுக் கொம்புடன் கூடிய தலைக்கவசம் பெரோஸின் பல நாணயங்களில் சாசானிய பாணியில் காணப்படுவதைப் போலவே இருக்கும். [11] அம்மியனஸ் மார்செலினஸ் மேலும் குறிப்பிடுகிறார், அவர் சாபூர் என்று கருதும் மன்னன், பெர்சியர்களால் "சான்சான்" மற்றும் "பைரோசென்" என்று அழைக்கப்பட்டார். இது உண்மையில் கிழக்கு ஹூனப் பழங்குடியினரின் ஆட்சியாளரான "ஷாஹான்சா பெரோஸை"க் குறிக்கலாம். [12]

குசான-சசானியர்களின் பாணியில் நாணயங்கள்[தொகு]

குசான பாணியில் உள்ள இவரது நாணயங்களைத் தவிர, பெரோஸ் சாசானிய பாணியில் வெள்ளி மற்றும் தங்க நாணயங்களை வெளியிட்டுள்ளார். அதில் இவர் குசான-சாசானிய ஆட்சியாளர் முதலாம் வராக்ரனின் பெயரை அடிக்கடி உபயோகித்துள்ளார். மேலும் அதில் வராக்ரன் ஆட்டுக்கடா கொம்புகளுடன் ஒரு சிறப்பான சாசானிய தலைக்கவசத்தை அணிந்திருப்பதையும் காட்டுகிறார். [13]

சான்றுகள்[தொகு]

 1. Tandon, Pankaj (2009). "The Western Kshatrapa Dāmazāda". The Numismatic Chronicle 169: 177. 
 2. (in en) A Comprehensive History of India. Orient Longmans. 1957. பக். 253. https://books.google.com/books?id=xQ9uAAAAMAAJ. 
 3. Tandon, Pankaj (2009). "The Western Kshatrapa Dāmazāda". The Numismatic Chronicle 169: 177. 
 4. 4.0 4.1 Cribb, Joe. "The Kidarites, the numismatic evidence.pdf" (in en). Coins, Art and Chronology II, Edited by M. Alram et Al.. https://www.academia.edu/38112559. 
 5. The Cambridge History of Iran, Volume 3, E. Yarshater p.209 ff
 6. The Cambridge Companion to the Age of Attila, Michael Maas, Cambridge University Press, 2014 p.284 ff
 7. Rezakhani, Khodadad (2017). "Saansaan Pirosen: Ammianus Marcellinus and the Kidarites" (in en). The Digital Archive of Brief Notes & Iran Review, University of California 1 (3): 44–50. https://www.academia.edu/32671205. 
 8. Rezakhani, Khodadad (2017). "Saansaan Pirosen: Ammianus Marcellinus and the Kidarites" (in en). The Digital Archive of Brief Notes & Iran Review, University of California 1 (3): 44–50. https://www.academia.edu/32671205. 
 9. Rezakhani, Khodadad (2017). "Saansaan Pirosen: Ammianus Marcellinus and the Kidarites" (in en). The Digital Archive of Brief Notes & Iran Review, University of California 1 (3): 44–50. https://www.academia.edu/32671205. 
 10. Rezakhani, Khodadad (2017). "Saansaan Pirosen: Ammianus Marcellinus and the Kidarites" (in en). The Digital Archive of Brief Notes & Iran Review, University of California 1 (3): 44–50. https://www.academia.edu/32671205. Rezakhani, Khodadad (2017).
 11. Rezakhani, Khodadad (2017). "Saansaan Pirosen: Ammianus Marcellinus and the Kidarites" (in en). The Digital Archive of Brief Notes & Iran Review, University of California 1 (3): 44–50. https://www.academia.edu/32671205. 
 12. “Persis Saporem saansaan appellantibus et pirosen, quod rex regibus imperans et bellorum victor interpretatur.”
 13. Rezakhani, Khodadad (2017). "Saansaan Pirosen: Ammianus Marcellinus and the Kidarites" (in en). The Digital Archive of Brief Notes & Iran Review, University of California 1 (3): 44–50. https://www.academia.edu/32671205. Rezakhani, Khodadad (2017).
 14. 14.0 14.1 14.2 Cribb, Joe (2018) (in en). Problems of Chronology in Gandhāran Art: Proceedings of the First International Workshop of the Gandhāra Connections Project, University of Oxford, 23rd-24th March, 2017. Archaeopress. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781784918552. https://books.google.com/books?id=I7dTDwAAQBAJ&pg=PA27. 
 15. "Feature Auction CNG 73 Kushano-Sasanians , Peroz (III)". CNG Coins. பார்க்கப்பட்ட நாள் 27 May 2021.
 16. "eAuction 201 - Rare Peroz Drachm". CNG Coins. பார்க்கப்பட்ட நாள் 27 May 2021.
 17. Another similar coin with reading [1]

ஆதாரங்கள்[தொகு]

முன்னர்
கிரடா
கிடாரைட்டுகள்
350-360
பின்னர்
முதலாம் கிடாரன்