பெரும் துளைச் சுரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெரும் துளை அல்லது பெரும் பள்ளம்.

பெரும் துளை அல்லது பெரும் பள்ளம் என்பது தென்னாப்பிரிக்காவின் கிம்பர்லியில் உள்ள ஒரு திறந்தவெளிச் சுரங்கம் ஆகும். இதுவே கைகளால் தோண்டப்பட்ட உலகின் பெரிய துளை அல்லது பள்ளம் ஆகும். 1871-ஆம் ஆண்டில் இருந்து 1914 ஆம் ஆண்டு வரை 50,000 ஆட்கள் இதனைத் தோண்டினர். இங்கு 2,720 கிலோ வைரம் கிடைத்தது. பெரும் துளையின் மேற்பரப்பு 42 ஏக்கர் அளவும் 463 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் ஆழம் 240 மீட்டர்கள். கழிவுகள் கொட்டப்பட்டதால் இதன் ஆழம் 215 மீட்டராகக் குறைந்தது. இதில் தற்போது 40 மீட்டர் உயரத்திற்கு நீர் உள்ளது.

மேலும் பார்க்க[தொகு]