பெரும் அண்டக்குழைவு
பெரும் அண்டக்குழைவு (Big Crunch) என்பது நமது பேரண்டத்தின் கடைசி விதியாக பிரபஞ்சவியல் வல்லநர்கள் முன்வைக்கும் கருதுகோள்களுள் ஒன்று. இதன்படி விரிவடைந்து கொண்டே போகும் நமது பிரபஞ்சம் கடைசியில் ஒட்டுமொத்தமாய்ச் சுருங்கி ஒரு கருந்துளையாகி விடும்.
ஹபிள் விதி பிரபஞ்சம் விரிவடையும் வேகத்தைக் கூறுகிறது. பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசை அப்பொருட்களின் செறிவு மற்றும் அழுத்தத்தைப் பொறுத்தது. இவ்வாறு விரிவடைந்து கொண்டே சென்றால் ஒரு வேளையில் பிரபஞ்ச அடர்த்தி மாறுநிலை அடர்த்தி (critical density) யை விட அதிகமாகும். அப்போது ஈர்ப்பு விசையானது பிரபஞ்சம் விரிவடைவதைத் தடுத்து மறுபடியும் அதைச் சுருங்கச் செய்யும்.
சிலரது கருதுகோளின் படி நமது பேரண்டம் இப்படிச் சுருங்கிப் பின் ஒரு பெரு வெடிப்பினைத் துவங்கி விரிவடையும். மீண்டும் சுருங்கும். இவ்வாறு பிரபஞ்சம் என்றும் மாறாமல் இருக்கும். ஆனால் பெரு வெடிப்பு மற்றும் பெரும் குழைவு ஆகிய நிலைகளை மாறி மாறி அடையும்.[1]
மேற்கோள்கள்[தொகு]
.