பெரும்பரப்பு வலையமைப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரும்பரப்பு வலையமைப்பு என்பது பூமியின் பரந்த பிரதேசத்தில் பலநூறு கணினிகளை கொண்டிருக்கும் கணினி வலையமைப்பு ஆகும். இவ்வகை வலையமைப்புக்களானது ரவுட்டர் ஊடாக பொதுத் தொடர்பாடல் வலையமைப்புக்களைப் பாவிக்கும் ஓரே பரந்த வலையமைப்பு ஆகும். இவை நாடுகடந்த பன்னாட்டு வலையமைப்புகளாகவும் இருக்கலாம் எடுத்துக்காட்டாக உலக உணவுத் திட்டம் இன் பெரும்பரப்பு வலையமைப்பு. இவ்வகை இணைப்புகளை ஏற்படுத்துவதற்காக குத்தகைக்கு எடுக்கப்படும் இணைப்புக்கள் (லீஸ்ட் லைன்), வீசட் இணைப்புக்கள் மற்றும் வைமக்ஸ் தொழில் நுட்பத்தையே பயன்படுத்துவார்கள். பெரும்பரப்பு வலையமைப்பிற்கு இணையம் இதற்கு உதாரணமாகும்.