பெருநிறுவனக் குழுமம்
Jump to navigation
Jump to search
பெருநிறுவனக் குழுமம் அல்லது பல்நிறுவனக் குழுமம் என்று அறியப்படுவது தாய் நிறுவனங்கள், பற்று நிறுவனங்கள் மற்றும் சேய் நிறுவனங்களின் கூட்டுக் குழுமமாகும். இத்தகைய குழுமம் ஒரே நிறுவனத் தொடராக அறியப்படுவதோடு பொதுவான நிதிமையமும் கட்டுப்பாட்டு மையமும் கொண்டிருக்கும்.[1]
விவரங்கள்[தொகு]
வரி நிலவரம், கணக்கு வழக்கு, சட்ட நெருக்கடிகள் ஆகியவற்றின் போது பெருநிறுவனக் குழுமங்கள் ஒரே நிறுவனமாய்க் கருதப்படும். பல்வேறு துறைகளில் ஈடுபட்டாலும் ஒரே குழுவாய் இருக்கும் குழுமத்தை பல்துறை பெருநிறுவனக் குழுமம் என்றழைப்பர்.
பெருநிறுவனக் குழுமங்கள் நிறுவன இணைப்புகளாலும் பங்கு வர்த்தக ஆக்கிரமிப்புகளாலும் சாத்தியம் ஆகின்றன. பல்வேறு நாடுகள் பெருநிறுவனச் சட்டம் என்று தனியே ஒரு சட்டம் வகுத்து நெறிமுறைகளை உருவாக்கியுள்ளன.[2]