பல்துறை பெருநிறுவனக் குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்துறை பெருநிறுவனக் குழுமம் என்று அறியப்படுவது பல்வேறு துறைகளில் ஈடுபடும் நிறுவனங்களை கொண்ட பெருநிறுவனக் குழுமம் ஆகும். இத்தகைய குழுமங்கள் பெரும்பாலும் சர்வதேச அளவில் செயல்படுவன.

விவரங்கள்[தொகு]

பல்துறை பெருநிறுவனக் குழுமம் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் இழப்பை குறைக்கின்றது. தமக்கு கீழ் செயல்படும் ஒரு கிளை நிறுவனத்தில் ஏற்படும் இழப்பை மற்றொரு கிளை நிறுவனத்தின் மூலம் சரிகட்டும் வாய்ப்பு உள்ளது.[1]

ஆனாலும் துறைகளுக்கு ஏற்ப இத்தகைய குழுமங்களை நிருவகிப்பது கடினம். பண்பாட்டு வேறுபாடுகளால் ஏற்படும் சிக்கல்கள், குறிப்பிட்ட ஒரு துறையின் மீது கவனம் செலுத்த முடியாமை, இதனால் குழுமம் தோல்வி காணும் அபாயம் என்று பல்துறை பெருநிறுவனக் குழுமங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அநேகம்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பல்துறை பெருநிறுவனக் குழுமங்கள் தரும் தீர்வுகளும் சிக்கல்களும் - இன்வெஸ்டோபீடியா".
  2. "நிறுவனங்களில் பண்பாட்டு வேறுபாடுகளால் ஏற்படும் சிக்கல்கள் - பிபிசி".
  3. "பல்துறை பெருநிறுவனக் குழுமம் - மணிடேர்ம்ஸ்".