பெருஞ்சிர்ட்டிசு பிளானம்
பெருஞ்சிர்ட்டிசு சமவெளி என்பது சிர்டிஸ் முதன்மை நாற்கரத்தில் உள்ள பள்ளத்தாக்கப் படுகை ஆகும். இது ஐசிடிசுக்கு மேற்கே செவ்வாய்க் கோளின் வடக்கு தாழ்நிலங்களுக்கும் தெற்கு மேட்டுநிலங்களுக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள ஓர் இருண்ட இடமாகும். இது குறைந்த காப்புக் கவசம் கொண்ட எரிமலை என்று செவ்வாய் முழுக்கோள அளக்கைக் கலத்தின் தரவுகளின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டது , ஆனால் முன்பு இது ஒரு சமவெளி என்று நம்பப்பட்டது , பின்னர் இது பெருஞ்சிர்ட்டிசு சமவெளி என்று அழைக்கப்பட்டது.[1] இப்பகுதியின் பசால்டிக் எரிமலை பாறையிலிருந்து இருண்ட நிறம் வருகிறது. இது தூசி இல்லாத பகுதி.
செவ்வாய்க் கோள் 2020 தரையூர்திப் பயணத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட தரையிறங்கும் தளம் யெசெரோ பள்ளம் ஆகும். இந்நாற்கரப்பகுதியின் ஆயங்கள்: 18′51′′18°51′18″N 77°31′08″E / 18.855°N 77.519°E′′N 77′31′′08′′E / 18.8555′N 77.519′E / 18.18°51′18″N 77°31′08″E / 18.855°N 77.519°E.519′′ ஆகும். பெருஞ்சிர்ட்டிசு சமவெளியின் வடகிழக்கு பகுதியும் தரையிறங்கும் வாய்ப்புள்ள தளமாக கருதப்பட்டது.
மேலும் காண்க
[தொகு]- உயரத்தின் அடிப்படையில் செவ்வாய்க் கோளில் உள்ள மலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hiesinger, H.; Head (publications), J. W. (8 January 2004). "The Syrtis Major volcanic province, Mars: Synthesis from Mars Global Surveyor data". Journal of Geophysical Research 109 (E1): E01004. doi:10.1029/2003JE002143. E01004. Bibcode: 2004JGRE..10901004H.