பென்டாபுளோரோபீனைல் எசுத்தர்
பென்டாபுளோரோபீனைல் எசுத்தர்கள் (Pentafluorophenyl esters) என்பவை RC(O)OC6F5 என்ற பொது வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் எசுத்தர் சேர்மங்களாகும். அணுக்கருநாட்டத் தாக்குதலால் இவை எளிதில் பாதிக்கப்படுகின்றன. பென்டாபுளோரோபீனால் சேர்மத்திலிருந்து (HOC6F5). இவை வருவிக்கப்படுகின்றன. உயிரி மூலக்கூறுகளில் உள்ள முதல்நிலை அமீன்களுடன் புளோரசீன் அல்லது எப்டீன் போன்ற புளோரோபோர் சேர்மங்களை இணைக்கப் பயனுள்ளதாக இது செயல்படுகிறது [1] or haptens[2]. ஆய்வக பெப்டைடு தொகுப்பு வினையிலும் இவை மிகுந்த பயனளிக்கின்றன. சக்சினிமிடைல் எசுத்தர்கள் மற்றும் இது போன்ற தொடர்புள்ள பல்வேறு முகவர்கள் போல அமைடு பிணைப்புகளை பென்டாபுளோரோபீனைல் எசுத்தர்கள் உற்பத்தி செய்கின்றன. இணைதல் வினைகளின் போது தன்னிச்சையாக நிகழும் நீராற்பகுப்பு வினைகளால் இவை குறைவாகப் பாதிக்கப்படுகின்றன என்பதால் இத்தகைய எசுத்தர்கள் மிகுந்த பயனளிக்கும் சேர்மங்களாக உள்ளன [3]
.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hanai, T.; Hatano, H. (1996). Advances in Liquid Chromatography: 35 Years of Column Liquid Chromatography. World Scientific Publication Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-02-1906-2.
- ↑ Deck, M. B.; Sjölin, P.; Unanue, E. R.; Kihlberg, J. (1999). "MHC-Restricted, Glycopeptide-Specific T Cells Show Specificity for Both Carbohydrate and Peptide Residues" (pdf). The Journal of Immunology 162 (8): 4740–4744. பப்மெட்:10202015. http://www.jimmunol.org/content/162/8/4740.full.pdf.
- ↑ Katz, J. (1998-12-15). "Advances in Peptide Coupling" (pdf). Harvard University.[தொடர்பிழந்த இணைப்பு]