உள்ளடக்கத்துக்குச் செல்

பென்சாயில் பெராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பென்சாயில் பெராக்சைடு (BPO or BzO2) ஒரு மருந்துப் பொருளும் மற்றும் தொழில்துறை வேதிப்பொருளுமாகும்.[1] ஒரு மருந்தாக, இது லேசானது முதல் மிதமான முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. மிகவும் கடுமையான நிலைகளுக்கு, இது மற்ற சிகிச்சைகளுடன் இணைத்து பயன்படுத்தப்படலாம்.[2] சில பதிப்புகள் கிளின்டாமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் கலந்து விற்கப்படுகின்றன.[3] வெளுப்பதற்கு பயன்படுத்தப்படும் மாவு, முடிச்சாயம், பல் வெளுப்பாக்கம் மற்றும் துணி வெளுத்தல் ஆகியவை பிற பயன்பாடுகளில் அடங்கும். [4] [5] [6] இது நெகிழித் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது .

தோல் எரிச்சல், வறட்சி அல்லது தோல் உரிதல் ஆகியவை பொதுவான பக்க விளைவுகளாகும். [2] [7] கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவது குறித்து தெளிவற்ற நிலையே காணப்படுகிறது. [8] பென்சாயில் பெராக்சைடு பெராக்சைடு குடும்பத்தில் உள்ள வேதிப்பொருளாகும்.[5] முகப்பருவுக்குப் பயன்படுத்துகின்ற நிலையில், பாக்டீரியாவைக் கொல்வதன் மூலம் இது செயல்படுகிறது. [4]

பென்சாயில் பெராக்சைடு முதன்முதலில் 1905 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு 1930 களில் மருத்துவ பயன்பாட்டிற்கு வந்தது. [4] இது உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உள்ளது. இது சுகாதார அமைப்பில் தேவைப்படும் மிகவும் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான மருந்துகளில் ஒன்றாகும். [9] பென்சாயில் பெராக்சைடு ஒரு பொதுவான மருந்தாகவும் மருந்தகங்களில் கிடைக்கிறது.

பயன்கள்

[தொகு]

முகப்பரு சிகிச்சை

[தொகு]
முகப்பரு சிகிச்சைக்கு நீர் சார்ந்த 5% பென்சாயில் பெராக்சைடு தயாரிப்பின் குழாய்

முகப்பரு புண்களின் எண்ணிக்கையையும் தீவிரத்தையும் குறைக்க பென்சாயில் பெராக்சைடு பயனுள்ளதாக இருக்கும். இது முகப்பருவுடன் தொடர்புடைய கியூடிபாக்டீரியம் ஆக்னஸ் பாக்டீரியாவில் பாக்டீரிசைடு விளைவைக் கொண்டிருக்கிறது. மேலும், இது நோய் எதிருயிரியின் எதிர்ப்பைத் தூண்டாது. [10] இது சாலிசிலிக் அமிலம், கந்தகம், எரித்ரோமைசின் அல்லது கிளின்டாமைசின் ( நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ), அல்லது அடாபலீன் (ஒரு செயற்கை ரெட்டினாய்டு ) ஆகியவற்றுடன் இணைந்து பயன்படுத்தப்படலாம். இரண்டு பொதுவான சேர்க்கை மருந்துகளில் பென்சாயில் பெராக்சைடு / கிளின்டாமைசின் மற்றும் அடாபலீன் / பென்சாயில் பெராக்சைடு ஆகியவை அடங்கும், பெரும்பாலான ரெட்டினாய்டுகள் பெராக்சைடுகளால் செயலிழக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு இது ஒரு அசாதாரண உருவாக்கம் ஆகும். பென்சாயில் பெராக்சைடு / கிளின்டாமைசின் மற்றும் பென்சாயில் பெராக்சைடு / சாலிசிலிக் அமிலம் போன்ற கூட்டு தயாரிப்புகள் முகப்பரு புண்களுக்கு சிகிச்சையளிக்க பென்சாயில் பெராக்சைடை விட சற்று பயனுள்ளதாக இருக்கும். [11]

முகப்பரு சிகிச்சைக்கான பென்சோயில் பெராக்சைடு பொதுவாக கூழ்மம், குழைமம் அல்லது திரவ வடிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. செறிவானது, 2.5% முதல் 5.0% வழியாக, 10% வரை அதிகரிக்கும். [10] பென்சோயில் பெராக்சைடின் அதிக செறிவுகள் குறைந்த செறிவுகளைக் காட்டிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தை வலுவான சான்றுகள் ஆதரிக்கவில்லை.

பென்சாயில் பெராக்சைடு தொடக்கத்தில் வறட்சியையும், சில நேரங்களில் எரிச்சலையும் தரக்கூடும். இருப்பினும் ஒரு வாரத்திற்குப் பிறகு தோலானது மருந்துப்பொருளுக்கான ஏற்பினைப் பெற்று விடுகிறது. ஒரு மிகச்சிறிய விழுக்காட்டினர் இம்மருந்துப் பொருளுக்கு மிகவும் நுண்ணுர்வுடன் எரிச்சல், அரிப்பு. பொருக்கு, மற்றும் வீக்கத்தை அனுபவிக்கிறார்கள். [12] மிகக் குறைந்த செறிவைப் பயன்படுத்துவதும் பொருத்தமானதாக உருவாக்குவதும் மிகவும் தர்க்கரீதியானது. தோலானது மருந்தினை ஏற்கும் நிலை அடைந்தவுடன், அளவு அல்லது செறிவை அதிகரிப்பது மற்றும் அதிக அளவிற்கான ஏற்குந்தன்மையைப் பெறுவது சிறந்த, அடுத்தடுத்த நிலையிலான முகப்பரு சிகிச்சைக்கான வழிமுறையாக இருக்கலாம்.[13]

கடுமையான முகத் தூய்மையாக்கிகளைத் தவிர்ப்பதன் மூலமும், சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்வீச்சிலிருந்து தோலைப் பாதுகாப்பதற்காக தடவப்படும் குழைமத்தை பயன்படுத்துவதன் மூலமும் எரிச்சல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stellman, Jeanne Mager (1998). Encyclopaedia of Occupational Health and Safety: Guides, indexes, directory (in ஆங்கிலம்). International Labour Organization. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789221098171. Archived from the original on 2017-09-18.
  2. 2.0 2.1 WHO Model Formulary 2008 (PDF). World Health Organization. 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789241547659. Archived from the original (PDF) on 13 December 2016.
  3. British national formulary : BNF 69. British Medical Association. 2015. p. 820. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780857111562.
  4. 4.0 4.1 4.2 Plewig, G. (2012). ACNE and ROSACEA (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 613. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642597152. Archived from the original on 2017-09-18.
  5. 5.0 5.1 Pommerville, Glendale Community College Jeffrey C. (2012). Alcamo's Fundamentals of Microbiology: Body Systems (in ஆங்கிலம்). Jones & Bartlett Publishers. p. 214. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781449605957. Archived from the original on 2017-09-18.
  6. Braun-Falco, Otto (2012). Dermatology (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1039. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642979316. Archived from the original on 2017-09-18.
  7. Hamilton, Richart (2015). Tarascon Pocket Pharmacopoeia 2015 Deluxe Lab-Coat Edition. Jones & Bartlett Learning. p. 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781284057560.
  8. "Benzoyl Peroxide topical Use During Pregnancy | Drugs.com". www.drugs.com. Archived from the original on 16 January 2017. பார்க்கப்பட்ட நாள் 13 January 2017.
  9. "WHO Model List of Essential Medicines (19th List)" (PDF). World Health Organization. April 2015. Archived from the original (PDF) on 13 December 2016. பார்க்கப்பட்ட நாள் 8 December 2016.
  10. 10.0 10.1 Simonart, T. (December 2012). "Newer approaches to the treatment of acne vulgaris". Am. J. Clin. Dermatol. 13 (6): 357–64. doi:10.2165/11632500-000000000-00000. பப்மெட்:22920095. 
  11. Seidler, E. M. (July 2010). "Meta-analysis comparing efficacy of benzoyl peroxide, clindamycin, benzoyl peroxide with salicylic acid, and combination benzoyl peroxide/clindamycin in acne". J. Am. Acad. Dermatol. 63 (1): 52–62. doi:10.1016/j.jaad.2009.07.052. பப்மெட்:20488582. 
  12. "Benzoyl peroxide". Mayo Clinic. January 1, 2016. Archived from the original on July 18, 2016.
  13. Alldredge, Brian K., ed. (2013). Applied Therapeutics: The Clinical Use of Drugs (10th ed.). Baltimore: Wolters Kluwer Health/Lippincott Williams & Wilkins. p. 949. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1609137137.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சாயில்_பெராக்சைடு&oldid=3950331" இலிருந்து மீள்விக்கப்பட்டது