பெண்ணம்மா இயாக்கோபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்ணம்மா இயாக்கோபு
Pennamma Jacob
உறுப்பினர், கேரள சட்டமன்றம்
பதவியில்
1970–1977
முன்னையவர்பி.சி. ஜோசப்
பின்னவர்பி.வி. ஆபிரகாம்
தொகுதிமூவாற்றுபுழா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 பிப்ரவரி 1927
இறப்பு8 அக்டோபர் 1998
துணைவர்பி.டி. இயாக்கோபு
உறவுகள்டி.எம். இயாக்கோபு (மருமகன்)

பென்னம்மா இயாக்கோபு (Pennamma Jacob) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1927 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1970 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை மூவாட்டுபுழா சட்டமன்றத் தொகுதியில் கேரள சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[1][2] இவர் ஒரு சுயேச்சை வேட்பாளராக இருந்தார்.[3]

பென்னம்மா இயாக்கோபு தனது பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். [4] 17 வயதில் பள்ளி ஆசிரியராக இருந்த பி.டி. இயாக்கோபை மணந்து கொண்டார்.[5] இவர் டி.எம். இயாக்கோப்பின் மாமியார் என்றும் அறியப்படுகிறார்.[5] 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதியன்று பென்னம்மா இயாகோபு இறந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MEMBERS OF PREVIOUS ASSEMBLY - FOURTH KLA (1970 - 1977)". Kerala Legislature. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  2. "From 1957 to 2021: Woman leaders in Kerala Assembly - A rundown". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  3. Paul, John L. (2021-03-05). "In Muvattupuzha, unpredictable shifts in voting patterns" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/elections/kerala-assembly/in-muvattupuzha-unpredictable-shifts-in-voting-patterns/article34001397.ece. 
  4. 4.0 4.1 "Pennamma Jacob". Kerala Legislature. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  5. 5.0 5.1 "Pennamma Jacob – the sole woman who made it to Kerala Assembly from Ernakulam district". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணம்மா_இயாக்கோபு&oldid=3805866" இலிருந்து மீள்விக்கப்பட்டது