பெண்டகோனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்டகோனைட்டு
Pentagonite
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCa(VO)Si4O10·4(H2O)
இனங்காணல்
நிறம்பசும்நீலம்
படிக இயல்புபட்டகம் போன்ற படிகங்கள், பெரும்பாலும் கதிரியக்க தொகுதிகள்
படிக அமைப்புநேர்சாய் சதுரம்
இரட்டைப் படிகமுறல்பல இரட்டைகள் எனவே போலி பென்டகோனால் சீர்மை
பிளப்பு{010} உல் நன்று
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை3 - 4
மிளிர்வுபளபளப்பானது
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி2.33
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.533 nβ = 1.544 nγ = 1.547
இரட்டை ஒளிவிலகல்δ = 0.014
பலதிசை வண்ணப்படிகமைபார்க்கலாம்: X=Z= நிறமற்றது Y= நீலம்
2V கோணம்அளக்கப்பட்டது: 50°
மேற்கோள்கள்[1][2][3]

.

பெண்டகோனைட்டு (Pentagonite) என்பது Ca(VO)Si4O10•4(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அரிய சிலிக்கேட்டு வகை கனிமமாகும். வழக்கத்திற்கு மாறான இரட்டைப் படிக ஐந்து மடிப்பு சமச்சீர் தோற்றத்தில் இருப்பதால் இதற்கு பெண்டகோனைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது. கேவன்சைட்டு கனிமத்தினுடைய மறு உருவமாக இது கருதப்படுகிறது [1]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெண்டகோனைட்டு கனிமத்தை Ptg[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

1973 ஆம் ஆண்டு முதன் முதலில் பெண்டகோனைட்டு அமெரிக்காவின் ஓரிகன் மாநிலம், மால்கியுவர் மாகாணத்திலுள்ள ஓவிகி மாநில ஏரிப் பூங்காவில் கண்டறியப்பட்டது [1]. இந்தியாவின் பூனா மாவட்டத்திலும் கூட கிடைப்பதாக கூறப்படுகிறது. கேவன்சைட்டு, இயுலான்டைட்டு, சிடில்பைட்டு, அனால்சைம், அப்போபைலைட்டு, கால்சைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து பசால்ட்டு போன்ற சில பாறை வகைகளின் பள்ள நிரப்பியாக இயற்கையில் இது கிடைக்கிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்டகோனைட்டு&oldid=3938833" இலிருந்து மீள்விக்கப்பட்டது