உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்கள் பற்றிய ஆராய்ச்சிக்கான ஒலி மற்றும் படக் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண்கள் பற்றிய ஆராய்ச்சிக்கான ஒலி மற்றும் படக் காப்பகம் (Sound and Picture Archives for Research on Women or SPARROW) என்பது மும்பையின் தகிசரில் அமைந்துள்ள இந்தியப் பெண்களின் வரலாற்றை பற்றிய ஒலி மற்றும் படக் காப்பகமாகும்.[1]

இந்த ஆவணக் காப்பகத்தில் இந்தியாவின் பெண்களின் வரலாறு தொடர்பான அச்சு, காட்சி, புகைப்படம் மற்றும் திரைப்படப் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.[2] 1988 ஆம் ஆண்டு தமிழ் பெண்ணிய எழுத்தாளர் சி.எஸ்.லக்ஷ்மி (அம்பை) அவர்களால் நிறுவப்பட்ட இந்த காப்பகம், இந்தியாவின் பெண்களின் வரலாற்றின் மிகப்பெரிய காப்பகமாகும்[3].

இந்தக் காப்பகம் பெண்களைப் பற்றிய வாய்மொழி வரலாறு, தனிப்பட்ட ஆவணங்கள், பதிவு செய்யப்பட்ட பேச்சுகள், புகைப்படங்கள், சுவரொட்டிகள், பாடல்கள், கலைப் பணிகள் போன்றவற்றைச் சேகரிப்பதோடு பல்வேறு துறைகளில் மாற்றத்தின் முகவர்களாக விளங்கும் பெண்களைப் பற்றிய ஆவணப்படங்களையும் உருவாக்கி வருகிறது. [4]

வரலாறு

[தொகு]

இந்த பெண்கள் காப்பகத்தை ஒரு சாதாரண சேகரிப்பு மையமாக அமைக்காமல், துடிப்பான மற்றும் தகவல் தொடர்பு கொண்ட ஒரு காப்பகமாக உருவாக்கும் யோசனையை அடிப்படையாகக் கொண்டு நிறுவன அறங்காவலர் டாக்டர்.சி.எஸ்.லட்சுமி, டாக்டர் நீரா தேசாய் மற்றும் டாக்டர் மைத்ரேயி கிருஷ்ணராஜ் ஆகியோரால் இந்த காப்பகம் 'குருவி' என்ற புனைப்பெயரோடு 1988 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. [5]

இதன் ஆரம்ப நான்கு ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சென்று ஆவணங்களையும் பிற சேகரிப்புகளையும் செய்ததோடு இவ்வமைப்பு இயங்குவதற்குத் தேவையான நிதியுதவிக்கும் இதன் நிறுவனர்கள் முயன்றுள்ளனர். இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பின்னரே பல்வேறு நிறுவனங்களின் நிதி ஆதரவோடு சொந்தக் கட்டடம் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் இந்த அமைப்பு தன் சொந்தக் கட்டடத்திற்கு மாறியுள்ளது. இது கூடு என்று அழைக்கப்படுகிறது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pant Zachariah, Mini (22 February 2010). "A treasure of women's history at SPARROW". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 28 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140228192525/http://www.hindustantimes.com/india-news/mumbai/a-treasure-of-women-s-history-at-sparrow/article1-511471.aspx. பார்த்த நாள்: 21 January 2014. 
  2. Onkar, Deepa (28 February 2010). "SPARROW flies high". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/sparrow-flies-high/article790462.ece. பார்த்த நாள்: 21 January 2014. 
  3. Faleiro, Sonia (11 October 2008). "Spoken like a woman". Mint. http://www.livemint.com/Leisure/1FUN80Ou0QHhWxSeyD9kNJ/Spoken-like-a-woman.html. பார்த்த நாள்: 21 January 2014. 
  4. Kumar, N Vinoth (2 July 2013). "Archiving politics of daily life". The New Indian Express. http://www.newindianexpress.com/cities/chennai/Archiving-politics-of-daily-life/2013/07/02/article1662351.ece?service=print. பார்த்த நாள்: 21 January 2014. 
  5. glus@jgu.edu.in, Global Library-O. P. Jindal Global University. "Library Guide - O.P. Jindal Global University". libguides.jgu.edu.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-16.
  6. "இறக்கைகளைக் கண்டறிதல்".