உள்ளடக்கத்துக்குச் செல்

பெஞ்சமின் கிளெதுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெஞ்சமின் கிளெதுரா
Benjámin Gledura
பெஞ்சமின் கிளெதுரா 2016 ஆம் ஆண்டில்
நாடுஅங்கேரி
பிறப்பு4 சூலை 1999 (1999-07-04) (அகவை 25)
ஈகெர், அங்கேரி
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2016)
பிடே தரவுகோள்2652 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2654 (சூன் 2019)
தரவரிசைஇல. 95 (திசம்பர் 2021)
உச்சத் தரவரிசைNo. 88 (மார்ச்சு 2022)

பெஞ்சமின் கிளெதுரா (Benjámin Gledura) அங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரராவார். 1999 ஆம் ஆண்டு சூலை மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2016 ஆம் ஆண்டு இவருக்கு சதுரங்க கிராண்டுமாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சதுரங்க வாழ்க்கை

[தொகு]

1999 ஆம் ஆண்டில் பிறந்த கிளெதுரா 2014 ஆம் ஆண்டில் பன்னாட்டு மாசுட்டர் பட்டத்தையும் [1] [2] 2016 ஆம் ஆண்டில் கிராண்டுமாசுட்டர் பட்டத்தையும் பெற்றார். 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அங்கேரியின் சதுரங்க வீரர் தரவரிசையில் 6 ஆவது இடத்தில் இருந்தார். [3]

ஜனவரி 2019 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் கிளெதுரா டாடா எஃகு நிறுவனத்தின் சதுரங்கப் போட்டியில் போட்டியிட்டு, 8½/13 (+5–1=7) புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். [4] மார்ச் மாதம்,இவர் ஐரோப்பிய தனிநபர் சதுரங்கப் போட்டியில் பங்கேற்றார். அப்போட்டியில் இவர் 7½/11 (+5–1=5) புள்ளிகளுடன் 19 ஆவது இடத்தைப் பிடித்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றார். [5]

2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரத்தில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியிலும் இவர் கலந்து கொண்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 3rd quarter Presidential Board Meeting August 2014 FIDE
  2. 87th FIDE Congress 2016, Baku, Azerbaijan FIDE
  3. Staff writer(s) (February 2019). "Federations Ranking - Hungary". FIDE. Archived from the original on 2018-02-10. பார்க்கப்பட்ட நாள் 2018-02-09.
  4. McGourty, Colin (28 January 2019). "Tata Steel 2019, 13: Carlsen's Magnificent Seven". Chess24.
  5. European Individual Chess Championship 2019: Gledura Benjamin chess-results

புற இணைப்புகள்

[தொகு]
  • Benjamin Gledura player profile and games at Chessgames.com
  • Benjamin Gledura rating card at FIDE
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஞ்சமின்_கிளெதுரா&oldid=3779398" இலிருந்து மீள்விக்கப்பட்டது