பூர்ண பக்தி பெர்டிவி அருங்காட்சியகம், ஜகார்த்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூர்ண பக்தி பெர்டிவி அருங்காட்சியகம்
Museum Purna Bhakti Pertiwi
பூர்ண பக்தி பெர்டிவி அருங்காட்சியக முகப்பு
Map
நிறுவப்பட்டதுஆகஸ்டு 23, 1993
அமைவிடம்ஜேஎல்.தாமான் மினி I, தாமான் மினி இந்தோனேசியா இந்தா, ஜகார்த்தா 13560, இந்தோனேசியா
வகைசிறப்புவாய்ந்த அரசியல் பிரமுகர் வரலாற்று அருங்காட்சியகம்

பூர்ண பக்தி பெர்டிவி அருங்காட்சியகம் (Purna Bhakti Pertiwi Museum), நவீன இந்தோனேசியன் வரலாற்றில் முக்கியமான அரசியல் பிரமுகரும், இந்தோனேசியாவின் முன்னாள் இரண்டாவது ஜனாதிபதியுமான சுஹார்டோவின் வாழ்க்கையை சித்தரிக்கின்ற வரலாற்று அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் தாமான் மினி இந்தோனேசியா இந்தா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இது சுஹார்ட்டோவின் அதிக எண்ணிக்கையிலான சேகரிப்புகளைக் கொண்டுள்ளதோடு அவற்றைக் காட்சிப்படுத்தியும் வைத்துள்ளது. இந்த சேகரிப்புகளில் அவரது 32 ஆண்டு கால நிர்வாகத்தின்போது பல்வேறு உலகத் தலைவர்கள் மற்றும் இந்தோனேசிய மக்களிடமிருந்து பெறப்பட்ட பெரும்பாலும் மதிப்புமிக்க பொருள்கள், கலைப்படைப்புகள் மற்றும் நினைவிதழ்கள் பொருட்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் ஒரு நவீன கட்டிடமாகும். இது டம்பெங்கின் வடிவங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டம்பெங் என்பது பாரம்பரிய ஜாவானிய கூம்பு வடிவ அரிசி உணவினைக் குறிப்பதாகும். இதற்கு நன்றி என்று பொருள் ஆகும்.

வரலாறு[தொகு]

பூர்ண பக்தி பெர்டிவி அருங்காட்சியகம் மேடம் டீன் சுஹார்ட்டோவின் என்பவரின் முன்முயற்சியின் அடிப்படையில் கட்டப்பட்டது ஆகும். இது சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு நன்றி உணர்வினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும் சுஹார்ட்டோவுக்கு இந்தோனேசிய மற்றும் சர்வதேச சமூகத்தின் அளித்த மரியாதை மற்றும் ஆதரவுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டது.[1][2] இது பூர்ண பக்தி பெர்டிவி அறக்கட்டளையால் 1987 ஆம் ஆண்டுக்கும் 1992 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகளாக 19.73 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்பட்டதாகும். இந்த அருங்காட்சியகத்தை ஆகஸ்ட் 23, 1993 ஆம் நாளன்று ஜனாதிபதி சுஹார்டோ திறந்து வைத்தார்.

அமைப்பு[தொகு]

ராமாயணத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அத்தியாயமான.ராம தம்பக்கை சித்தரிக்கின்ற, 9.8 மீட்டர் உயரமுள்ள முழு மரத்தில் ஜாவானிய மர செதுக்குதல்

பூர்ண பக்தி பெர்டிவி அருங்காட்சியகத்தின் வளாகத்தில் முதன்மைக் கட்டிடம், துணை கட்டிடங்கள், பெரிய நிலப்பரப்பு மற்றும் ஓவிய வீடு ஆகியவை அமைந்துள்ளன. சுமார் 18,605 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கூம்பு வடிவ முதன்மைக் கட்டிடத்தில் [2] பின்வரும் அமைப்புகள் காணப்படுகின்றன. போராட்ட மண்டபம், முதன்மை மண்டபம், சிறப்பு மண்டபம், அஸ்தாபிரதா மண்டபம் மற்றும் நூலகம். இந்தோனேசிய சுதந்திரப் போராட்டம் முதல் இந்தோனேசிய வளர்ச்சியின் சகாப்தம் வரையிலான சுஹார்ட்டோவின் வாழ்க்கையின் வரலாற்றுப் பொருட்கள் இங்கு காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

சேகரிப்புகள்[தொகு]

முதன்மை அறையில் சோஹார்ட்டோவின் மாநிலப் பார்வையாளர்கள், நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்கள் வழங்கிய பல்வேறு நினைவு மலர்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அவர்களில் கம்போடிய பிரதமர் ஹுன் சென் மற்றும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது ஆகியோரும் அடங்குவர். அவர்கள் இருவரும் வெள்ளியாலான வெற்றிலைப் பெட்டியை அன்பளிப்பாகத் தந்துள்ளனர். டச்சு பிரதம மந்திரியான லப்பர்ஸ் ஒரு வெள்ளி புறா சிலையை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். மெக்சிகோவின் ஜனாதிபதி கார்லோஸ் சலினாஸ் டி கோர்டாரி, சுண்டைக்காய் வடிவ வெள்ளியில் ஆன கைவினைப்பொருளை அன்பளிப்பாகத் தந்துள்ளார். கஜகஸ்தான் ஜனாதிபதி நர்சுல்தான் நாசர்பாயேவ், வெள்ளித்தட்டுகளின் தொகுப்பை வழங்கியுள்ளதார். இன்னும் பல அருமையான பரிசுகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

இந்தோனேசிய அதிகாரத்துவத்தினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர் ஆகியோரால் வழங்கப்பட்ட பரிசுத் தொகுப்புகள் காட்சியில் உள்ளன. துலுங்காகுங் ரீஜண்டின் மனைவியிடமிருந்து பெறப்பட்ட கல் பொதித்த கிண்ணம் போன்றவை உள்ளன. கிண்ணத்தில் “திருமதி ஹார்ட்ஜந்தி பூர்னாண்டோவால் திருமதி டீன் சோஹார்டோ அவர்களுக்கு அன்போடு வழங்கப்பட்டது” என்ற குறிப்பு பொறிக்கப்பட்டுள்ளது.. பிரபல இந்தோனேசிய தொழிலதிபர் சுத்விகாட்மோனோ, ஜோஹர் மரத்தை (காசியா சியாமியா) அன்பளிப்பாகத் தந்துள்ளார். அதில் பெற்றோருடன் 11 குழந்தைகள் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கெட்டுட் மாடர்னின் மெம்பிராயட் என்ற மரத்தில், "பல குழந்தைகள், பல அதிர்ஷ்டங்கள் என்று வயதானவர்கள் நம்புகிறார்கள்" என்ற குறிப்பு உள்ளது. முதன்மை அறை சீன இளவரசி படுக்கையின் (பெரடான்) மாதிரிப் பிரதிகளைக் கொண்டுள்ளது. இது சீனாவின் யுனான் மாகாணத்தின் பச்சை ஜேட்-ஜேடைட்டால் செய்யப்பட்டதாகும். 2.77 மீட்டர் நீளமும், 2.14 மீட்டர் அகலமும் கொண்ட படுக்கையானது, சங் வம்சம் (960-1279) மற்றும் மிங் வம்சம் ஆகியவற்றைச் சேர்ந்த சீனப் பெண்ணின் படுக்கையைப் பின்பற்றி அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.[3]

குறிப்புகள்[தொகு]

  1. Museum Purna Bhakti Pertiwi brochure
  2. 2.0 2.1 "Museum Purna Bhakti Pertiwi". Soeharto Media Center (in Indonesian). SoehartoCenter-YCPPI. 2003. Archived from the original on ஏப்ரல் 26, 2012. பார்க்கப்பட்ட நாள் December 17, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  3. Museum in Jakarta, Purna Bhakti Pertiwi Museum பரணிடப்பட்டது 2010-02-05 at the வந்தவழி இயந்திரம்