பூர்ணிமா சேத்தி
பூர்ணிமா சேத்தி (Purnima Sethi) இந்தியாவின் புது தில்லியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1954ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதியன்று தில்லியில் இவர் பிறந்தார். பாரதிய சனதா கட்சியின் மூத்த தலைவராக அறியப்படுகிறார். 1993 ஆம் ஆண்டு கல்காச்சி (தில்லி சட்டமன்றத் தொகுதி) தொகுதியிலிருந்து தில்லி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டில் தில்லி அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றினார். சமூக நலம் மற்றும் உணவு மற்றும் வழங்கல் துறைகளில் அமைச்சராக இருந்தார்.
பூர்ணிமா சேத்தி, தேசுபந்து கல்லூரியில் அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களிலிருந்தே அவர் ஒரு தீவிர தலைவராக இருந்தார். 1974 ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முதல் பெண் இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதியன்று இறந்தார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Purnima Sethi is no more A dedicated BJP leader, devoted to the cause". Organiser. https://archive.today/20140625110400/www.organiser.org/Encyc/2012/10/27/Purnima-Sethi-is-no-moreA-dedicated-BJP-leader,-devoted-to-the-cause.aspx?NB=&lang=4&m1=&m2=&p1=&p2=&p3=&p4=&PageType=N. பார்த்த நாள்: 2020-01-28.
- ↑ "Purnima Sethi sworn-in as minister". Rediff On The NeT. 2 April 1998. Retrieved 2020-01-28.