பூர்ணிமா சின்ஹா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
== பூர்ணிமா சின் ==
பிறப்பு அக்டோபா் 12, 1927
கொல்கத்தா , இந்தியா
இறப்புஜூலை 11, 2015
பெங்களுரு, இந்தியா
வதிவுசாந்திநிகேதன், இந்தியா
தேசியம்இந்தியன்
துறைX-ray crystallography of clay minerals
நிறுவனம்Indian Institute of Science, Bangalore
Alma materகொல்கத்தா பல்கலைக்கழகம்
துறை ஆலோசகர்சத்யந்திர நாத் போஸ்
அறியப்பட்டதுஇயற்பியலில் முனைவா் பட்டம் பெற்ற முதல் வங்காள பெண்

பூர்ணிமா சின்ஹா (அக்டோபா் 12, 1927 - ஜூலை 11, 2015) ஒரு இந்திய இயற்பியலாளா் மற்றும் இயற்பியலில் முனைவா் பட்டம் பெற்ற முதல் வங்காள பெண் என்ற பெருமைக்குாியவா்.[1]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

பூர்ணிமா 1927 அக்டோபர் 12 இல் முனைவா் நரஸ் சந்திர சென் குப்தாவின் இளைய மகளாக பிறந்தார். நரஸ் சந்திர சென் குப்தா ஒரு அரசியலமைப்பு வழக்கறிஞர். ஒரு முற்போக்கு எழுத்தாளர், பெங்காலி  மற்றும் ஆங்கில மொழிகளில் அறுபத்து ஐந்துக்கு மேல்  நூல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றுள் சில பெண் கல்வி குறித்தவை.   இவர் மாந்தவியல் பேராசிரியரும் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் இந்தியாவில் பழங்குடி மக்களின் குமுகாய இணைப்பு நிலை குறித்த புாிந்துணா்வில் முக்கிய பங்களித்தவருமாகிய சுரஜித் சந்திர சின்ஹா என்பவரை மணந்தார்.[2]

கல்வி மற்றும் தொழில்[தொகு]

பூர்ணிமாவின் ஆரம்ப கல்வி அவரது மூத்த சகோதரியான சுஷமா சென்குப்தாவால் நிறுவப்பட்ட கொல்கத்தாவிலுள்ள லேக் என்னும் பள்ளியில் துவங்கியது. இவர் அசுதோஷ் கல்லூரியிலும், அதனை தொடா்ந்து ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியிலும் , இறுதியாக கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பயின்றாா். அவரது சுய கலை ஆர்வங்கள் மாறுபட்டவை, அவற்றுள்  யாமினி கங்குலியிடமிருந்து கற்றுக் கொண்ட ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையும் , நன்கு அறியப்பட்ட ஓவியர் கோபால் கோஸிடமிருந்து கற்றுக்கொண்ட ஓவியக் கலையும் குறிப்பிடத்தக்கவை. அவர் பண்டிதா் ஜான் பிரகாஷ் கோஷிடமிருந்து தபேலா குறித்த படிப்பினைகளை கற்றுக் கொண்டாா். அவரது பிற திறமைகளில் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுதலும் அடங்கும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, அவர் களிகனிமங்களில் எக்ஸ் கதிர் படிகவியலில்  முனைவா் பட்டம் பெற்றார். பேராசிரியர் சத்யேந்திர நாத் போஸின் வழிகாட்டுதலின் கீழ் ராஜாபஜார் அறிவியல் கல்லூரியின் ஒரு மாணவராக 1956-7ல்  கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் வங்காள பெண்ணாவார்.

புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Biographical article". 6 April 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Women In Science - IAS" (PDF). 6 April 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்ணிமா_சின்ஹா&oldid=2938413" இருந்து மீள்விக்கப்பட்டது