பூர்டு ஒலிபீன் தொகுப்பு
பூர்டு ஒலிபீன் தொகுப்பு ( Boord olefin synthesis ) என்பது ஈதர் களிலிருந்து ஆல்கீன்கள் தயாரிக்கப் பயன்படும் கரிம வேதியியல் வினையாகும். வினையூக்கி மக்னீசியம் அல்லது துத்தநாகம் முன்னிலையில் ஒரு ஆலசன் அணுவைக் கொண்டுள்ள ஈதர்களின் ஆக்சிசன் அணுக்களில் இருந்து இரண்டு கார்பன் அணுக்கள் நீக்கப்பட்டு ஆல்கீன்கள் தயாரிக்கப்படுகின்றன. மிகுந்த பயனும் அதிக விரிவாக்க எல்லையும்[1] கொண்ட இந்த அற்புதமான பெயர்வினையை 1930 [2] ஆம் ஆண்டு செசில் பூர்டு கண்டறிந்தார்.
நீக்கல் வினையான இவ்வினையில் வினையூக்கியாக செயல்படும் மக்னீசியம் முதலில் கிரிக்னார்டு கரணி என்னும் இடைநிலை சேர்மமாக உருவாகிறது. அல்காக்சி குழுக்களின் எலக்ட்ரான்கள் வெளிவிடும் செயல்பாடு குறைவு என்பதால் இருபடிநிலை செயல்முறையான E1cB நீக்க வினை வழிமுறை பரிந்துரைக்கப்படுகிறது[1]. இக்கரிம வேதிவினை தொடர்பான அசல்வெளியீடு சமஎப்டீனைத் பலபடிநிலைகளில் தொகுக்கும் வினை விளக்குகிறது.
இவ்வினையில் மக்னீசியத்திற்குப் பதிலாக துத்தநாகம் பயன்படுத்தப்பட்டு 1,4 டையீன்கள் தொகுப்பதாக 1931ஆம் ஆண்டு வெளியீடு விவரித்தது[3]. ( பார்க்க பார்பியர் வினை ). கருநாட்டப்பிரதியிடும் இவ்வினையின் முதல் பகுதியில் அல்லைல் கிரிக்னார்டு மின்னணு மிகுபொருளாக செயல்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Advanced Organic Chemistry, 4th Edition, Jerry March, 1992.
- ↑ The synthesis of beta-bromo-alkyl ethers and their use in further synthesis Lloyd C. Swallen and Cecil E. Boord J. Am. Chem. Soc.; 1930; 52(2) pp 651 - 660; எஆசு:10.1021/ja01365a033
- ↑ Nuclear syntheses in the olefin series II. 1,4-diolefins Bernard H. Shoemaker and Cecil E. Boord J. Am. Chem. Soc.; 1931; 53(4) pp 1505 - 1512; எஆசு:10.1021/ja01355a049 10.1021/ja01355a049