பூட்டான் ஒளிபரப்பு சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூட்டான் ஒளிபரப்பு சேவை (ஆங்கிலம்:Bhutan Broadcasting Service) என்பது பூட்டானில் அரசுக்கு சொந்தமான வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவையாகும். இது ஒரு பொது சேவை நிறுவனமாகும். இது பூட்டன் அரசின் நிதியால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் வானொலி மற்றும் தொலைக்காட்சி இரண்டையும் இராச்சியத்திற்கு வழங்கும் ஒரே சேவை நிறுவனமாகும். மேலும் இது பூட்டானிய எல்லைக்குள் இருந்து ஒளிபரப்பப்படும் ஒரே தொலைக்காட்சி சேவை நிறுவனமாகும். தொலைதொடர்பு பயன்பாடு தற்போது 2006 இன் தகவல், தகவல் தொடர்பு மற்றும் ஊடகச் சட்டம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது

வரலாறு[தொகு]

பல ஆண்டுகளாக, பூட்டானுக்கு நவீன தொலைத்தொடர்பு வசதி இல்லை. பூட்டானின் தேசிய இளைஞர் சங்கம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அரை மணி நேரம் செய்தி மற்றும் இசையை வானொலி ஒலிபரப்பத் தொடங்கியபோது, முதல் வானொலி ஒளிபரப்பு 1973 நவம்பரில் தொடங்கியது.[1] இந்த அலைவரிசை முதலில் திம்புவில் உள்ள உள்ளூர் தந்தி அலுவலகத்தில் இருந்து ஒரு வாடகை கட்டிடத்திலிருந்து தொடங்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டில் அரசாங்கம் இதை கையகப்படுத்தியது.[2] பின்னர், 1986 ஆம் ஆண்டில் இதற்கு பூட்டான் ஒளிபரப்பு சேவை என பெயரிட்டது.[3] வானொலி திட்டமிடல் விரிவாக்கம் மற்றும் 1991 இல் நிகழும் நவீன ஒளிபரப்பு வசதியை நிர்மாணித்தல் என்பது இதன் நோக்கமாகும்.

நீண்ட காலமாக, தொலைக்காட்சியை தடை செய்த உலகின் ஒரே நாடு பூட்டான் ஆகும்.[4] இறுதியாக இதன் ஒளிபரப்பு ஜூன் 2, 1999 அன்று இரவு, ஜிக்மே சிங்கே வாங்சக்கின் வெள்ளி விழா நிகழ்ச்சியை ஒளிபரப்பிலிருந்து ஆரம்பமானது.[5]

பூட்டானில் வானொலி[தொகு]

1991 இல் குறைந்த அலைவரிசை கொண்ட வானொலி நிலையங்கள் பூட்டான் முழுவதும் தொடங்கப்பட்டது. ஜூன் 2000 இல், நாட்டின் தெற்கு மற்றும் மேற்கில் பண்பலை நிலையங்கள் திறக்கப்பட்டது. ஜனவரி 2001 இல் மேலும் இது மத்திய பூட்டான் வரை விரிவடைந்தது. 2005 ஆம் ஆண்டின் இறுதியில், பண்பலை வானொலி சேவை நாடு முழுவதும் சென்றடைந்தது. நவம்பர் 2009 முதல், வானொலி 24 மணிநேரமும் ஒளிபரப்பப்படுகின்றன..

பூட்டானில் தொலைக்காட்சி[தொகு]

பூட்டானில் முதல் தொலைக்காட்சி நிலையம் பூட்டான் ஒளிபரப்பு சேவை என்பதாகும். இதில் செய்திகள், ஆவணப்படங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் முதலில் வாரத்தில் ஏழு நாட்களும் மாலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒளிபரப்பப்பட்டன, பின்னர் டிசம்பர் 2004 இல் நான்கு மணி நேரம் என (மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை) விரிவாக்கப்பட்டன. தலைநகரில் மட்டும் இருந்த இந்தத் தொலைக்காட்சி சேவை பிப்ரவரி 2006 இல் செயற்கைக்கோள் வழியாக முழு நாட்டிற்கும் பரவியது. இது நாடு முழுவதும் 31 தொலைக்காட்சி நிலையங்களை கொண்டு இயக்குகிறது.

சர்ச்சை[தொகு]

பூட்டானிய மக்களிடையே பூட்டான் ஒளிபரப்பு சேவை மிகவும் பிரபலமாக இருந்தாலும், தவறான நிர்வாகம் அதன் வளர்ச்சியை பாதித்துள்ளது. மூத்த அரசு ஊழியர்களை தலைமை நிர்வாக அதிகாரிகளாக நியமித்தல் மற்றும் வருடாந்த வரவுசெலவுடன் விளையாடுவது ஆகியவை. மேலும் அதன் நடவடிக்கைகளையும் உள்ளடக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசாங்கத்தின் முயற்சிகளும் இதில் அடங்கும். தொகுப்பாளர்கள் அடிக்கடி தொலைக்காட்சித் திரையில் இருந்து திடீரென மறைந்துவிடுவார்கள். இதனால் தயாரிப்பாளர்களில் ஒருவர் பூட்டான் ஒளிபரப்பு சேவை மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

டிசம்பர் 6, 2012 அன்று, இந்திய புலனாய்வுப் பணியகம் பூட்டான் ஒலிபரப்பு சேவையின் 24 பேரை இந்திய விரோத திட்டங்களை ஒலிபரப்பி வெறுப்புணர்வை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பற்றிய அறிக்கையினை இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது.[6]

குறிப்புகள்[தொகு]

  1. Logan, Stephen (2008). Asian communication handbook 2008. AMIC. p. 134.
  2. Sterling, Christopher (2004). The Museum of Broadcast Communications encyclopedia of radio. Fitzroy Dearborn. p. 104.
  3. Drost, Harry (1991). The World's news media: a comprehensive reference guide. Longman. p. 53.
  4. Bhutan to enter TV age. BBC News. April 26, 1999.
  5. Larsson, Tomas (2001). The race to the top: the real story of globalization. Cato Institute. பக். 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1930865143. https://archive.org/details/racetotop00toma. 
  6. MHA glare on hate channels: Govt puts on notice 24 foreign TV channels showing anti-India content after intel alert
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூட்டான்_ஒளிபரப்பு_சேவை&oldid=2868178" இலிருந்து மீள்விக்கப்பட்டது