புளோபோரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளோபோரைட்டு
Fluoborite
பொதுவானாவை
வகைபோரேட்டு கனிமம்
வேதி வாய்பாடுMg3(BO3)(F,OH)3
இனங்காணல்
மோலார் நிறை186.61 கி/மோல்
நிறம்நிறமற்றும் ஊதா அல்லது வெண்மை
படிக இயல்புஊசி, பட்டகம்,நட்சத்திரம்
படிக அமைப்புஅறுகோணம்
பிளப்பு{0001} இல் நன்று
மோவின் அளவுகோல் வலிமை3.5
மிளிர்வுபளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும், ஒளிபுகும்
ஒப்படர்த்தி2.98
ஒளியியல் பண்புகள்ஓரச்சு (-)
ஒளிவிலகல் எண்nω = 1.570 nε = 1.534
இரட்டை ஒளிவிலகல்0.036
புறவூதா ஒளிர்தல்புற ஊதாவில் முழுமையான பாலேடு வெண்மை
மேற்கோள்கள்[1][2][3]

புளோபோரைட்டு (Fluoborite) என்பது Mg3(BO3)(F,OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கனிமத்தின் முக்கிய பகுதிக் கூறுகளாகிய புளோரின் மற்றும் போரான் ஆகிய தனிமங்களின் முதல் சில எழுத்துக்களைக் கொண்டு இக்கனிமத்திற்கான பெயர் உருவாக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் 1926 ஆம் ஆண்டு புளோபோரைட்டு கண்டறியப்பட்டது.

புளோபோரைட்டின் படிக அமைப்பு அறுகோணமாகும், சுழற்சி ஆறுக்கு ஒரு மடங்கில் இருக்கும் என்பது இதன் பொருளாகும் [4]. சி-அச்சுக்கு செங்குத்தாக ஒரு கண்ணாடிச் சமதளமும் இப்படிகத்தில் உண்டு. மற்ற அனைத்து அறுகோண கனிமங்கள் போல இதுவும் ஒற்றைச் சரிவச்சில் அதாவது ஒரே ஒளியியல் அச்சுடன் படிகமாகிறது. திசையற்றும் இருபக்கச் சிதறல் பண்புடனும் காணப்படுகிறது.

புளூபோரைட் மூன்று முக்கிய அமைப்புகளாகக் காணப்படுகிறது. போரோன் மிகுந்த வளர் உருமாற்ற மக்னீசியம் பல்லுருவப் பாறைகளில், தொடர்புள்ள பல்லுருவ பளிங்குகல்லில், தொடர்புள்ள பல்லுருவ மாக்னடைட்டு படிவில் என மூன்றுவித அமைப்புகளில் புளோபோரைட்டு காணப்படுகிறது. சுவீடனின் வாசுட்டுமேன்லேண்டு மாகாணத்தில் நார்பெர்க் பகுதியிலுள்ள டால் சுரங்கத்திலும், எசுப்பானியாவின் உயெர்ட்டா டெல் வினாகர் சுரங்கத்திலும் என இரண்டு பகுதிகளில் இக்கனிமம் கிடைக்கிறது [5].

லுத்விகைட்டு, கான்ட்ரோடைட்டு, மேக்னடைட்டு கால்சைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து சுவீடனிலும், மூரியைட்டு, வில்லெமைட்டு, புளோரைட்டு, ஐதரோசிங்கைட்டு, பைரோகுரோயைட்டு, சிங்கைட்டு, ரோடோகுரோசைட்டு ஆகிய கனிமங்களுடன் கலந்து நியூ யெர்சி சிடெர்லிங் மலையிலும் இக்கனிமம் கிடைக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Handbook of Mineralogy
  2. Fluoborite on Mindat.org
  3. Fluoborite Mineral Data on Webmineral
  4. Anthony, J.W., Bideaux, R.A., Bladh, K.W., and Nichols, M.C. (2003)Fluoborite. Handbook of Mineralogy Volume V Borates, Carbonates, Sulfates, 791 p. Mineral Data Publishing, Tucson, AZ.
  5. Camara, F. and Ottolini, L., 2000. "New data on the crystal-chemistry of fluoborite by means of SREF, SIMS, and EMP analysis." http://rruff.geo.arizona.edu/doclib/am/vol85/AM85_103.pdf. Accessed 1 November 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோபோரைட்டு&oldid=2659740" இருந்து மீள்விக்கப்பட்டது