புறவளர்ச்சி (தாவரம்)
புறவளர்ச்சி (Enation) என்பது இலைகளில் செதில் போலத் தோன்றும் அமைப்புகளாகும். இவை குழல் திசு இல்லாததால் இலைகளிலிருந்து வேறுபடுகின்றன. இவை இலை நோய் சிலவற்றின் காரணமாக உருவாக்கப்படுகின்றன. இவை சைலோட்டத்தில் சாதாரணமாக நிகழ்கிறது. ரைனியா போன்ற சில ஆரம்பக்கால தாவரங்களிலும் இந்த அமைவுகள் காணப்படுகின்றன. இங்கு இவை ஒளிச்சேர்க்கையில் உதவுதாக அனுமானிக்கப்படுகிறது.[1]