புரோமா தாகூர்
புரோமா தாகூர் | |
---|---|
பிறப்பு | கொல்கத்தா, இந்தியா |
தொழில் | கவிஞர், பதிப்பாசிரியர் |
தேசியம் | கனடியன் |
காலம் | 2000-தற்போது வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | லேங்குவேஜ் இஸ் நாட் எ ஒன்லி திங் தட் பிரேக்ஸ் |
புரோமா தாகூர் (Proma Tagore) என்பவர் ஒரு கனடிய கவிஞர் மற்றும் பதிப்பாசிரியர் ஆவார், இவர் 2014 ஆம் ஆண்டு நங்கை, நம்பி, ஈரர், திருனர் எழுத்தாளர்களுக்கான டேன் ஓகில்வி பரிசில் தனிச்சிறப்புக்கான கௌரவத்தைப் பெற்றார் [1]
இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்த தாகூர் நான்கு வயதில் தனது குடும்பத்துடன் கனடாவிற்குக் குடிபெயர்ந்தார். [2]பிரிட்டிசு கொலம்பியாவின் விக்டோரியா மற்றும் வான்கூவரில் வசிக்கிறார். [2]
லேங்குவேஜ் இஸ் நாட் எ ஒன்லி திங் தட் பிரேக்ஸ் எனும் ஒரு கவிதைத் தொகுப்பையும் தி ஷேப்ஸ் ஆஃப் சைலன்ஸ்: ரைட்டிங் பை வுமன் ஆஃப் கலர் அண்ட் தி பாலிடிக்ஸ் ஆஃப் டெஸ்டிமினி எனும் இலக்கியப் பகுப்பாய்வினையும் வெளியிட்டார். [1] இனப் பாகுபாடு மற்றும் குடியேற்ற விலக்கம் என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் கட்டுரைகளின் தொகுப்பான இன் அவர் ஓன் வாய்சஸ்: லேர்னிங் அண்ட் டீச்சிங் டுவேர்ட் டீகாலனிசேசன் என்பதன் பதிப்பாசிரியராகவும் இருந்தார். [1]
படைப்புகள்
[தொகு]- இன் அவர் ஓன் வாய்சஸ்: லேர்னிங் அண்ட் டீச்சிங் டுவேர்ட் டீகாலனிசேசன் (லார்குமா பதிப்பகம், 2006.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9733821-2-0 )
- தி ஷேப்ஸ் ஆஃப் சைலன்ஸ்: ரைட்டிங் பை வுமன் ஆஃப் கலர் அண்ட் தி பாலிடிக்ஸ் ஆஃப் டெஸ்டிமோனி ( மெக்கில்-குயின்ஸ் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2009.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780773534551)
- லேங்குவேஜ் இஸ் நாட் எ ஒன்லி திங் தட் பிரேக்ஸ் ( ஆர்சனல் பல்ப் பதிப்பகம், 2011.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781551523996 )
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Baldassi, Julie (24 June 2014). "Tamai Kobayashi wins 2014 Dayne Ogilvie Prize for LGBT Emerging Writers". Quill & Quire. https://quillandquire.com/awards/2014/06/24/tamai-kobayashi-wins-2014-dayne-ogilvie-prize-for-lgbt-emerging-writers/. பார்த்த நாள்: 27 September 2018.Baldassi, Julie (24 June 2014). "Tamai Kobayashi wins 2014 Dayne Ogilvie Prize for LGBT Emerging Writers". Quill & Quire. Retrieved 27 September 2018.
- ↑ 2.0 2.1 "2014 Dayne Ogilvie Prize for LGBT Emerging Writers Honour of Distinction: Proma Tagore". Writers' Trust of Canada.