புரோட்டானேற்ற ஓசோன்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஐதராக்சி(ஆக்சோ)ஆக்சிடேனியம்
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6030661 |
| |
பண்புகள் | |
HO3+ | |
வாய்ப்பாட்டு எடை | 49.01 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புரோட்டானேற்ற ஓசோன் (Protonated ozone) என்பது HO+3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் ஐதரசன் பல்லாக்சைடு சேர்மமாகும். இதை O3H+ என்ற வாய்ப்பாட்டாலும் எழுதலாம். நேர்மின் அயனிக் கட்டமைப்பான இக்கட்டமைப்பில் ஓசோன் அலகின் ஒரு முனையில் ஐதரசன் அணு இணைக்கப்பட்டிருக்கும். இந்த வேதிப்பொருள் பல விண்மீன், வளிமண்டல மற்றும் செயற்கை இரசாயன செயல்முறைகளில் ஓர் இடைநிலையாக இருப்பதாக முன்மொழியப்பட்டது.[1] பல்வேறு வலிமையான அமிலங்களைப் பயன்படுத்தி ஓசோனை புரோட்டானேற்றம் செய்து நிறை அலைமாலைமானி சோதனைகளில் இது செயற்கையாகத் தயாரிக்கப்பட்டது.[2] தொடர்புடைய சோதனைகள் ஐதரசன் ஓசோனைடை உருவாக்குவதற்கான முன்னோடியாக இதை பயன்படுத்தியுள்ளன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ceotto, Michele; Gianturco, Franco A.; Hirst, David M. (1999). "Protonated Ozone: Structure, Energetics, and Nonadiabatic Effects". J. Phys. Chem. A 103 (48): 9984–9994. doi:10.1021/jp9923769. Bibcode: 1999JPCA..103.9984C.
- ↑ Fulvio Cacace; Speranza, Maurizio (8 July 1994). "Protonated Ozone: Experimental Detection of O3H+ and Evaluation of the Proton Affinity of Ozone". Science 265 (5169): 208–209. doi:10.1126/science.265.5169.208. பப்மெட்:17750658. Bibcode: 1994Sci...265..208C. https://archive.org/details/sim_science_1994-07-08_265_5169/page/208.
- ↑ Cacace, Fulvio; de Petris, Giulia; Pepi, F.; Troiani, Anna (2 July 1999). "Experimental Detection of Hydrogen Trioxide". Science 285 (5424): 81–82. doi:10.1126/science.285.5424.81. பப்மெட்:10390365. https://archive.org/details/sim_science_1999-07-02_285_5424/page/81.