உள்ளடக்கத்துக்குச் செல்

புரூக்சு வால்வெள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி/1911 ஓ1 (புரூக்சு)
C/1911 O1 (Brooks)

C/1911 O1
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்): வில்லியம் ராபர்ட் புரூக்சு
கண்டுபிடித்த நாள்: சூலை 21, 1911
வேறு குறியீடுகள்: 1911 V, 1911c, புரூக்சு வால்வெள்ளி
சுற்றுவட்ட இயல்புகள் A
ஊழி: அக்டோபர் 11, 1911 (JD 2419320.5)
ஞாயிற்றுச்சேய்மைத் தூரம்: ~306.9 வா.அ[1]
ஞாயிற்றண்மைத் தூரம்: 0.489429 வா.அ
அரைப்பேரச்சு: ~153.7 வா.அ
மையப்பிறழ்ச்சி: 0.997005
சுற்றுக்காலம்: ~1900 yr[1]
சாய்வு: 33.8095°
கடைசி அண்மைப்புள்ளி: அக்டோபர் 28, 1911
அடுத்த அண்மைப்புள்ளி: தெளிவில்லை

சி/1911 ஓ1 (புரூக்சு) (C/1911 O1 (Brooks)) என்பது வில்லியம் ராப்ர்ட் புரூக்சு என்ற வானியலாளரால் 1911 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் கண்டறியப்பட்ட பிரகாசமான ஒரு வால்வெள்ளி ஆகும்.1911 வி வால்வெள்ளி, புரூக்சு வால்வெள்ளி என்ற பெயர்களாலும் இது அறியப்படுகிறது.

வெறும் கண்களால் பார்க்க முடிகின்ற இரண்டாம் நிலை பிரகாச ஒளிப்பொலிவு (1.5 முதல் 2.5 வரை) கொண்டிருப்பதால் இவ்வால்வெள்ளி குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. 30 பாகை நீளம் கொண்ட குறுகிய நேரான வாலும், தனித்துவமான நீலநிறமும் கொண்டதாக இவ்வால்வெள்ளி அறியப்படுகிறது. கார்பன் மோனாக்சைடை வெளியுமிழ்வதால் சில வால்வெள்ளிகள் பெரும்பாலும் இத்தகைய தனித்துவ நீலநிறத்தில் காணப்படுகின்றன[2]. மேலும், 1911 அக்டோபர் மாதத்தில் இதே நேரத்தில் வானத்தின் இதே பகுதியில் இரண்டாவது பிரகாசமான வால்வெள்ளியாகக் காணப்படுவதாலும் இவ்வால்வெள்ளி குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. சி/1911 எசு3 (பெல்யாவசுக்கி) என்ற பெயரால் குறிக்கப்படும் இது 15 பாகை நீளமுடைய வாலுடன் தங்க – மஞ்சள் நிறம் கொண்டும் முதல்நிலைப் பிரகாச ஒளிப்பொலிவை எட்டுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Horizons output. "Barycentric Osculating Orbital Elements for Comet C/1911 O1 (Brooks)". பார்க்கப்பட்ட நாள் 2011-02-03. (Solution using the Solar System Barycenter and barycentric coordinates. Select Ephemeris Type:Elements and Center:@0)
  2. 2.0 2.1 Bortle, J. The Bright Comet Chronicles, International Comet Quarterly, 1998
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூக்சு_வால்வெள்ளி&oldid=2747603" இலிருந்து மீள்விக்கப்பட்டது